பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக உத்தமர் காந்தி 55 காண விரும்பினர். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்தில், ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால், அவர் கொலை செய்யப்பட்டார். அவர் கண்ட, அந்த நாள் இந்தியா வீரர்களைக் கோழை யாக்கிவிடக்கூடியது; விவேகிகளை விசாரத்திலாழ்த்தக் கூடி யது, முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முது கெலும்பு முறிந்ததுபோலிருந்து, அடிமைச் சுமையினால் நம்பிக்கை தகர்ந்துபோயிருந்த நேரம். ஆட்சியின் முடிதரித்த மன்னர்களெல்லாம் ஆங்கில பிடியிலே. கேரட்டை கொத்தளம் கட்டிக் காத்தவர்களெல் லாம் நாட்டை இனி மீட்டிட முடியாது என்றெண்ணி வாட்ட முற்றுக் கிடந்தனர். எப்படியோ ஆட்சி நடக்கட்டும், இதை எதிர்ப்பதோ முடியாத காரியம், இதற்குப் பயபக்தி விசுவாசம் காட்டி ஏதேனும் பலன் பெற்று, காலந்தள்ளுவோம் என்று பலர் எண்ணிவிட்டனர். அவர்களிடம் ஆயுதம் இல்லை ஆட்சியாளர்களோ, ஆயுத பலமுள்ளவர்கள், அவர்களிடம் நம்பிக்க இல்லை, ஆட்சியாளர்களிடமோ, நம்பிக்கை, ஆணவமாகிவிட்ட நிலை. இந்த நிலையிலே தோன்றினார். விடுதலைப் போர் தொடுக்க. யார் அந்தச் சமயத்திலே நாட்டை நோக்கினாலும், நம்பிக்கை துளியும் பிறக்காது. இவர் நம்பிக்கையுடன் பணியாற்றலானார்.