பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உலகப் பெரியார் காந்தி நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும். நல்லாட்சி அமைக்கப் பல கலைவாணரையும் மக்களையும் நல்வழிங் படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாகவேண்டும். எந்த நாட்டிலும் அனைவரும் ஏககாலத்தில் கிடைக்கமாட்டார்கள். ஒரு தலைமுறையிலே வீரன் தோன்றி விடுதலை தருவான். மற்றோர் தலைமுறையிலே நிபுணர் தோன்றி நல்லாட்சி அமைப் பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார். உத்தமர் காந்தியாரின் உள்ளம் இந்த மூன்று பண்புகளை யும் ஏககாலத்தில் ஒன்றுக்கொன்று குறையாத அளவில் கொண்டு இருந்தது. மூன்று தலைமுறைகள் மூன்று தனித் தனித் தலைவர்கள் கொள்ளவேண்டிய குணத்தை அவர் கொண்டிருந்தார். உலவரலாற்றிலே இதற்கு வேறு ஈடு கிடையாது. விடுதலை வாங்கித் தந்தவர்கள் உண்டு, போர்த்திறனால்; நல்லாட்சி நிறுவியவர்கள் உண்டு - அறிவின் மேம்பாட்டினால்; மக்களை நல்லவர்களாக்கினவர்கள் உண்டு-தூய்மையினால் மூன்று அரும் பணிகளையும் ஒருசேரச் செய்த ஒப்பற்ற சிறப்பு உத்தமர் காந்தியார் ஒருவருக்கேதான் உண்டு! நாடு விடுதலைபெற, அன்னியருடன் போராடவேண்டி இருந்தது. செய்தார். வெற்றிபெற்று நாட்டுக்குச் சிறப்பை வாங்கித் தந்தார். நல்லாட்சி நிறுவுவதற்காக திட்டங்களை நிபுணர்களைக் கொண்டு தீட்டவேண்டும் -அந்தக் காரியத்தை நடத்த. அகிலம் அறிந்த பண்டித நேரு இருக்கிறார் என்ற களிப்பும் நம்பிக்கையும் கொண்டார்.