பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இளைஞன் வேலைக்கு வருகிருன், கிழவன் உணவுக்கு வருகிருன், -துருக்கிஸ்தானம் புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. இ -சன இளங் கன்று பயமறியாது. -தமிழ்நாடு வாலிபம் என்பது பைத்தியம். -கீழ் நாடுகள் கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பு:து. o -ஆப்கானிஸ்தானம் இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு , ஒல்லாம் தெரியும்! -ஃபிரான்ஸ் இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள். -ஜெர்மனி இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமை யில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய். -இங்கிலாந்து வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும். -அயர்லந்து வாலிபத்தைப் பாராட்டிப் பேசினல், அது மேன்மையடையும். -அயர்லந்து மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம். -லத்தீன் இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு. -சுவிடன் இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள். நடுவயதினர் ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர். -சுவீடன் ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். -ஃபிரான்ஸ் வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின் காய்ச்சல், -ஃபிரான்ஸ் மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம். -கதே வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்