பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத் தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும். - சீன வயிற்றுப் பக்கம் நோயில்லையாளுல் நோயாளி இறக்க மாட்டான். -சீன கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது. -ஆர்மீனியா நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணக்கமாட்டான். -ஜெர்மனி நோயே ஒரு வைத்தியன். -ஜெர்மனி நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும். -ஜெர்மனி நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும். -ஜெர்மனி உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்துவிடும். -போஸ்னியா நோயின் தந்தை எவன பிருந்தாலும், தாய் உணவுக் கோளாறு தான். -இங்கிலாந்து "ஆஸ்துமா வந்தவர் நெடுநாள் வாழ்வர். -அயர்லந்து முகத்தில் ஒரு பரு வந்துவிட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி. -அயர்லந்து ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன். -அயர்லந்து நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து. - அயர்லந்து வரட்சியான இருமல் வந்துவிட்டால், எல்லா நோய்களும் தீர்ந்துவிடும். (மரணம் வந்துவிடும்.) -வேல்ஸ் மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளே மறைத்துவிட்டுத் தானே முன்னல் தெரியும். -பல்கேரியா