பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம். -ஹங்கேரி ஈக்கும் இருமலுண்டு. -இத்தாலி நோம் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும். -லத்தீன் நோயின் கசப்பிலிருந்து தான் மனிதன் ஆரோக்கியத் தின் இனிமையை அறிகிருன். -கடலோனியா நோயாளி பின் நண்பன் அவனுடைய கட்டில்தான். -ஆப்பிரிக்கா நோயை மறைத்தல் அபாயம். -லத்தீன் நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம். -ஸ்பெயின் வரும்போது நோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும் -இங்கிலாந்து காலந்தோறும் நோயும் மாறுகின்றது. -இங்கிலாந்து தடுமலுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி. -இங்கிலாந்து புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானலும் உண்டாகும். -ஜப்பான் பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன். -டென்மார்க் பிணியே வராதவன் முதல்வகுப்பிலேயே இறந்து போவான். -இங்கிலாந்து நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம். -இங்கிலாந்து நோயாளி எதுவும் பேசலாம். -இத்தாலி நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்துக் கொள்கின்றது. -லத்தின் நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது. -லத்தீன் நோயாளிக்கு தேனும் கசக்கும். -ரஷ்யா