பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பண்டைக்காலம் முதல் மாருமல் இருப்பவை, நீரின் ஒட்டமும் காதலின் போக்கும். -ஜப்பான் ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அநுபவம் பாடம் கற்பிக்கும். -துருக்கி (கோவேறு) கழுதை மேலுள்ள பாரத்தில் சேணத்தைத் சேர்த்துக் கணக்கிடுவதில்லை. -துருக்கி உலகிலே ஆதாயம், புகழ் என்ற இரண்டு பேர்கள் மட்டுமே ஒடிச் சாடித் திரிகிருர்கள். -சீன வீட்டுக்குள்ளே வண்டி செய்யலாம், ஆனல் அதைப் பாதையிலேதான் ஒட்டவேண்டும். -சீன உலகம் முழுவதும் காகம் கருமைதான். -சீன நாயின் வாயில் தந்தம் இராது. -சீன சேற்றில் ஒர் அடி வைப்பதை விட, பத்தடி சுற்றிச் செல்வது மேல். -சீன வல்லவர்களை அடக்க வல்லவர்கள் உண்டு; திறமைசாலி களைத் தொடர்ந்து திறமைசாலிகள் வருவார்கள். -சீன வீட்டுக்கு வெளியே மனிதருக்கு மதிப்பு குறையும்; சரக்கு களுக்கு மதிப்புக் கூடும். -சீன நீர் கப்பலைத் தாங்கும், அதுவே கப்பலைக் கவிழ்க்கவும் செய்யும். -சீன வண்டி வந்தால், வழி உண்டாகும். -சீன வழியை அடைத்து வேலி போட்டால், - ஜனங்கள் அதில் ஏறிக் குதிப்பார்கள்: வழியைத் திறந்து வைத்தால், வேலியை உடைப்பதற்கு வேறிடம் பார்ப்பார்கள். -சீன ஒட்டகத்தின் மேலிருப்பவன் திட்டங்கள் போடுகிருன் ; ஒட்டகத்திற்கும் திட்டங்கள் உண்டு. -அரேபியா ஈச்ச மரத்திற்கு வேர் தண்ணிரிலும், உச்சி வெய்யிலிலும் இருக்க வேண்டும், -அரேபியா