பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 இரண்டு சனிக்கிழமைகளுக்கு இடையிலே எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கின்றன, -ஃபிரான்ஸ் ஒரு பையிலுள்ள அரிவாள், பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண்-இவைகள் தாம் இருப்பதை அறிவுறுத்திக் கொண்டேயிருக்கும். -ஜெர்மனி இந்தக் காலத்தில் சுவர்க்கத்திற்குப் போனல்தான் நாம் தேவர்களைச் சந்திக்க முடியும். -போலந்து பூட்ஸ் தேய்வைவிடப் பாதங்கள் தேய்வது நலமென்றே செல்வர்களும் ஏழைகளும் சேர்ந்து சொல்லுகிறர்கள் -போலந்து பெரிய மரம் சாய்ந்தவுடன், ஒவ்வொருவரும் வந்து அதை வெட்டிக் கொண்டு போவர். -போலந்து நீ இனிமையா யிருந்தால், உன்னை விழுங்கி விடுவார்கள்: கசப்பா யிருந்தால் உன்னை வெளியே துப்பிவிடுவார்கள். - -போலந்து தாடியுள்ள பெண்களையும், தாடி வளராத ஆண்களையும் நம்ப வேண்டாம். -பாஸ்க் கேள்வி, கவனம், மெளனம், பொறுமை-இவை நீ கேளாமலே எல்லாவற்றையும் உனக்குக் கற்பிக்கும். -பெல்ஜியம் தானக ஒடுகிற வண்டியைத் தள்ளிவிட ஆள் சேரும். -ஸ்காட்லந்து ஒர் அறையிலே மரணம்; அடுத்த அறையிலே வாரிசுரிமை. -ஸ்காட்லந்து பாட்டன் வாங்குகிருன், தந்தை கட்டுகிருன், மகன் விற்கிருன், பேரன் பிச்சையெடுக்கிருன், -ஸ்காட்லந்து நெட்டையா யிருந்தால் இராட்சசன் என்பார்கள், குட்டையா யிருந்தால் குள்ளன் என்பார்கள். -வேல்ஸ் தந்தையும் தாயும் நமக்குப் பேசக் கற்பித்துள்ளனர்; உலகம் வாயை மூடிக் கொண்டிருக்கக் கற்பித்துள்ளது. -ஹெலத்