பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 இத்தாலியில் படிக்கவேண்டும்; ஜெர்மனியில் உடைகள் வாங்கி அணியவேண்டும்; ஃபிரான்ஸில் விருந்து உண்ண வேண்டும். -போலந்து போலந்து குடியானவனின் நகரம், யூதனின் சுவர்க்கம்.- ( ' ) போலந்தில் ஆண்களைவிடப் பெண்களே பலசாலிகள் -( ' ) ஒவ்வொரு இத்தாலியனும் ஒரு வைத்தியன்; ஒவ்வொரு ஜெர்மானியனும் ஒரு வணிகன். -போலந்து போப்பாண்டவர் உள்ள இடம்தான் ரோமாபுரி. -போலந்து பெண்களின் செருக்கும், பாதிரிகளின் செருக்கும் அயர்லந்தை அழித்துவிடக் கூடியவை. அயர்லந்து குதிரை யில்லாவிட்டால், கோஸாக்கியன் இல்லை. -ரஷ்யா கோலாக்கியன் தான் பட்டினி கிடந்தாலும், தன் குதிரைக்கு இரையளிப்பான். -ரஷ்யா குதிரை மேலுள்ள கோஸாக்கியனைவிட, மேலானவர் கடவுள் ஒருவர்தான். -ரஷ்யா ரஷ்யாவின் இன்பம் குடி -ரஷ்யா உக்ரேனியாவுக்கு வெளியே சுதந்திரம் கிடையாது. --ரவியா செ ல் வம் உன் சொத்து உன்னிடமுள்ள அடைக்கலப் பொருள் என்று கருது. -அரேபியா செல்வமுள்ள இடத்தில் சோகம் சேர்ந்திருக்கும். -இந்தியா ஏழை பணக்காரனைல், நடுப்பகலில் நட்சத்திரங்களைப் பார்ப்பான். -இந்தியா வயிறு நிறைந்திருந்தால், பையும் நிறைந்திருக்கும். -( தங்கத்தின் ஒளியில் மூடனும் அறிவாளியாய்த் தோன்ற கிருன். -ஜப்பான் செல்வம் குற்றங்கள் அனைத்தையும் மறைக்கும். -Աե:5I