பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 தங்கத் திறவுக்கோல் எல்லாப் பூட்டுகளுக்கும் சேரும். --- -ஹங்கேரி ஒருவன் பணக்காரன் என்ருல், அவன் நீதியற்றவயிைருப்பான். அல்லது நீதியற்றவனின் வாரீசாக இருப்பான். -லத்தீன் வானத்திலிருந்து பால் மழையாகப் பொழிந்தாலும், ஏந்தி வைத்துக்கொள்ளப் பாத்திரங்கள் பணக்காரரிடமே இருக்கின்றன. -ரவியா எவன் செல்வன் என்ருல், தன்னிடம் இருப்பதும் தெரியா மல், இல்லாததும் தெரியாமலிருப்பவனே. -ரவி; யா தங்கச் செருப்புடன் உலகின் கடைசிவரை செல்லமுடியும். -ஆப்பிரிக்கா செல்வம் மூடுபனி போன்றது, நிமிடத்தில் சிதறிப்போகும், H - -ஆப்பிரிக்கா ஒருவனுடைய வயிறு நிறைந்திருந்தால், அவன் பையும் நிறைந்திருக்கும் -இந்தியா ஒரு பணக்கார மனிதன் சுவர்க்கத்தில் நுழைவதைக் காட்டி அலும், ஒர் ஒட்டகம் ஊசித் துவாரத்தில் நுழைவது எளிது. -புதிய ஏற்பாடு பெருஞ் செல்வம் என்பதில் பெரும் நஷ்டமும் அடங்கியிருக் கின்றது. -லாவோத்லே (எத்தனை அரிய குணங்களைப் பாழாக்கிச் செல்வம் சேர்க்கிருேம் என்பதைக் கவனிக்க வெண்டும்.) ஒரு மனிதன் எத்தனை பொருள்களைத் தேவையில்லை என்று தள்ளுகிருனே. அந்த அளவுக்குத்தான் அவன் செல்வ வைான். -தோரோ அதிகச் செல்வம் பேராசைக்குக் காரணம். -இங்கிலாந்து கடவுள் பணக்காரருக்கு உதவி புரியட்டும், ஏழைகள் பிச்சை யெடுத்துக் கொள்வார்கள். -இங்கிலாந்து பெருஞ் செல்வமும் மனநிறைவும் சேர்ந்திருப்பதில்லை. -( ' ) (பிறரிடம்) இச்சகம் பேசவோ, கடன் வாங்கவோ அவசிய மில்லாதவன் பணக்காரன்தான். -இங்கிலாந்து