பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நமது செல்வம் நம்மை அதிகாரம் செய்யத் தொடங்கில்ை, நாம் ஏழைகளே. -இங்கிலாந்து செல்வம் குவிந்து, மனிதர்கள் தாழ்ந்து போகும் நாட்டில். பிணிகள் மலிந்து, பீடையே பெருகும்.-கோல்ட்ஸ்மித் தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவைகளை வாங்கவே பயன்படும். -தோரோ செல்வர்களின் இன்பங்கள் ஏழைகளின் கண்ணிரை விலையாகக் கொடுத்து வாங்கப் பெறுகின்றன. -இங்கிலாந்து மெளனமாயுள்ள ஒரு பணக்காரனை நான் கண்டதேயில்லை -ஃபிரான்ஸ் ஆகப் பெரிய பணக்காரனும் முடிவில் ஒற்றைத் துணியோடு தான் போகிருன். -ஃபிரான்ஸ் கடவுள் பொதுவாக மூடக்கழுதைகளுக்குச் செல்வங்களைக் கொடுக்கிருர்; அவர்களுக்கு அவர். வேறு நல்லது எதை யும் கொடுப்பதில்லை. -லூதர் செல்வர்களுக்கு எல்லா இடங்களும் சொந்த இடம் போன்றது. -ஜெர்மனி செல்வர்களும் ஒரே வாயால்தான் உண்ண முடியும். - -ஜெர்மனி செல்வம் எண்ணிலடங்காத துயரங்களை மூடி மறைக்கின்றன. -கிரீஸ் செல்வத்தால் தெவிட்டுதல் வளரும், தெவிட்டுதலால் அக்கிரமம் வளரும். -கிரீஸ் செல்வம் மிகுந்த மனிதர்களிடையே தினசரி வாழ்வுக்குத் தேவையான அறிவு குறைவு. -லத்தீன் செல்வங்களை வணங்குதலால் ஒழுக்க விதிகள் பாழாகின்றன. -லத்தீன் வீடே வெள்ளியானல் சிரிக்கின்றது. -லத்தீன் நாம் அனைவரும், அவன் பணக்காரன என்றே கேட்கிருேம். அவன் நல்லவன என்று ஒருவரும் கேட்பதில்லை. -லத்தின்