பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 செல்வம், மனிதனின் கவலையைக் குறைத்து, மனத்தின் பாரத்தை நீக்குவதில்லை. -லத்தீன் செல்வம்-ஆண்டவர் முன்பு பாவம்; வறுமை-மனிதர் முன்பு பாவம். -ரவியா செல்வர்களுடைய மூடத்தனமான_வாக்கியங்கள் உயர்ந்த நீதி வாக்கியங்களைப் போல வழங்கி வருகின்றன. -ரஷ்யா உனக்குப் பணக்காரனக விருப்பமா? ஏழு வருடம் பன்றியாயிரு -glorf நீதியான எந்த மனிதனும் திடீரென்று பணக்காரகை ஆகிய தில்லை. -கிரீஸ் செல்வங்கள் கஷ்டப்பட்டுத் தேடப் பெறுகின்றன, கவலை யோடு காக்கப் பெறுகின்றன. துக்கத்தோடு இழக்கப் பெறுகின்றன. -இங்கிலாந்து செல்வமான இதயம் இல்லாவிட்டால், செல்வம் விகாரமான ஒரு பிச்சைக்காரனைப் போன்றதுதான். -எமர்ஸன் செல்வங்கள் பெருகினல், உன் இதயத்தை அவைகளின் பால் செலுத்த வேண்டாம். -பழைய ஏற்பாடு கழுகு வானத்தை நோக்கிச் செல்வதுபோல், செல்வங்கள் பறந்து போய் விடுகின்றன. -பழைய ஏற்பாடு பொன்னைவிட வல்லமையுள்ள பகைவன் இல்லை. -ஸெர்பியா சொத்து ஆன்மா கடவுளுக்கு, உடல் பூமிக்கு, சொத்து உரிமையுள்ளவர் களுக்கு. -இத்தாலி நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம். -அமெரிக்கா

  • -, [...]. –9