பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பணம், புத்தி, யோக்கியதை மூன்றைப் பற்றியும், கேள்விப் பட்ட்தில் கால் பாகத்தை மட்டும் நம்பு. -இங்கிலாந்து பணமில்லாதவன் சந்தையில் வேகமாய்ச் சுற்றுவான். ーイ” ) புழக்கத்திலுள்ள பணம் பெருகிவரும். -ஜெர்ஸி பணமில்லாமல் ஒருவன் எங்கும் செல்ல முடியாது, கோயி லுக்குக்கூடச் செல்ல முடியாது. -அமெரிக்கா பைக்குள் கிடக்கும் பணம் சலசலக்கும். -எஸ்டோனியா பணம் உருண்டு ஒடுவது. -எஸ்டோனியா பணம் பேசத் தொடங்கினல், உலகம் வாயை மூடிக் கொள்ளும். -எஸ்டோனியா நாய்கள் குரைக்கும், பணம் பேசும். -ஹங்கேரி பணமில்லாத பைக்குத் தோல் என்றுதான் பெயர். -இத்தாலி பணத்திற்கு வாசனையில்லை. (எங்கிருந்து வந்தாலும் ஒன்று தான்.) -ரவி; யா நாய் விற்ற காசு குரைக்குமா -தமிழ்நாடு பணமுள்ள இடத்திற்கே பணம் போய்ச் சேரும். -ரஷ்யா எவன் பணக்காரனே அவன் என் சகோதரன். -ரஷ்யா ரூபாயின் பெருமை அணுவிலிருக்கிறது. -ரவியா பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்; போகும் போது பல கால்களுடன் போகும். -ரஷ்யா ரொக்கப் பணம் ஒரு மந்திரவாதி. -ரஷ்யா உலகின் சிறந்த அடிப்படையாக விளங்குவது பணம். -ஸ்பெயின் பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது; பணம் இல்ல்ாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்பெயின் எந்த முட்டாளும் பணம் சம்பாதிக்க முடியும், அறிவாளிதான் அதை வைத்திருக்க முடியும். -அமெரிக்கா