பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வறுமை திருடத் துாண்டுவதில்லை, செல்வம் அதைத் தடுப்பது மில்லை -ஃபின்லாந்து செல்வத்தை மறைக்கலாம், வறுமையை மறைக்க முடியாது. -ஃபின்லாந்து வறுமை பாவமன்று, அதைவிட மோசமான ஒன்று. --ரவிய 7 வெறும் கரண்டி வாயைப் புண்ணுக்கும் . -ரஷ்யா வறுமை உண்மைக்கு முதல் வழி. -இங்கிலாந்து வறுமை அறிவாளியாக்கும், செல்வந் தனக்காது. —(?” ) வறுமையைப் போன்ற கல்வி வேறில்லை. -இங்கிலாந்து வறுமையின் பயன்கள் இனியவை. -ஷேக்ஸ்பியர் வறுமை நட்புக்கு உரைகல். -ஃபிரான்ஸ் வறுமை தைரியத்திற்குச் சோதனை. -ஃபிரான்ஸ் வறுமையில் மனிதனைக் காப்பது நம்பிக்கை. -மிண்ைடர் வறுமைக்கு நண்பர்களில்லை. -டாஸிடஸ் ஏழைகளிடத்தில் இரக்கமுள்ளவன் இறைவனுக்குக் கடன் கொடுக்கிருன். -பழைய ஏற்பாடு வறுமையைத் தாங்குவதைவிட அதை புகழ்வது எளிது. -இங்கிலாந்து பையில் கனம் குறைந்தால், நெஞ்சில் கனம் அதிகமாகும். -இங்கிலாந்து வறுமையிலே பொறுமைதான் ஏழைக்குப் பரிகாரம். -இங்கிலாந்து வறுமை சண்டையை வளர்க்கும். -இங்கிலாந்து வறுமைதான் கலைகளுக்கெல்லாம் தாய். -இங்கிலாந்து செல்வத்திற்குப்பின் - வறுமை வருவதைப் பார்க்கிலும், வறுமைக்குப் பின் செல்வம் வருவதே மேல். ( " ) வறுமை எல்லாப் பண்புகளையும் அழித்துவிடும். ( " ) வறுமை ஒரு வகையான குஷ்ட நோய். -ஃபிரான்ஸ்