பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

பக்தியைப் பார்க்கினும் பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கி யிருக்கிறது. - ஜெர்மனி முதலில் செல்வம் சேர்க்கவேண்டும், பிறகு கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். - ஜெர்மனி உலகத்திற்குத் தேவையில்லாதது கடவுளுக்கு அளிக்கப் பெறுகின்றது. - ஜெர்மனி ஆண்டவனுடைய பேரறிவும், மனிதனுடைய தவறும் சேர்ந்து உலகை ஆள்கின்றன. - ஜெர்மனி கடவுளைத் துணையாகக் கொண்டவனுக்கு உலகம் பகையாகும். - ஜெர்மனி கடவுள் பாவங்களை மன்னிக்கிறார். இல்லாவிடில் சுவர்க்கம் காலியா யிருக்கும். - ஜெர்மனி கடவுள் துணிகளாகக் கொடுப்பதில்லை, நூற்பதற்குப் பஞ்சாகக் கொடுக்கிறார். - ஜெர்மனி கடவுள் செல்வர்களுக்கு நிறைய ஆடுமாடுகளையும், ஏழைகளுக்குக் குழந்தைகளையும் அளிக்கிறார். - ஜெர்மனி மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான். சயித்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான். - ஜெர்மனி தேவைகளை யெல்லாம் குறைத்துக் கொண்டவன் தெய்வத்தின் அருகிலுள்ளவன். - ஜெர்மனி

தேவர்களுக்கு அஞ்சுபவனைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்.

-கிரீஸ்

ஆண்டவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு நாம் அஞ்சவேண்டும்.

-துருக்கி

கோழிகூடத் தண்ணீர் பருகும் பொழுது வானை நோக்குகின்றது. - துருக்கி அல்லா கொடுக்கும் பொழுது. 'நீ யார் மகன்?' என்று கேட்பதில்லை. - துருக்கி