பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச் ைச பிச்சை யெடுப்பதைவிட நஞ்சுண்பது எளிது. -கீழ் நாடு பிச்சைக்காரன் பை நிறைவதே யில்லை. -துருக்கி பசியோடுள்ள ஒருவன் பசியோடுள்ள ஒருத்தியுடன் சேர்ந்தால் உலகத்திலே ஒரு பிச்சைக்காரன் பிறக்கிருன். -துருக்கி பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்கும்படி நேர்ந்தவனுக்கு ஆண்டவன்தான் இரங்கவேண்டும். -கீழை நாடு பிச்சையளித்தலே சுவர்க்க வாயில்களைத் திறக்கும் தங்கத் திறவுகோல். -இங்கிலாந்து செல்வத்தின் அழகு ஐயமிடுதல். -ஃபிரான்ஸ் பிச்சையளித்தலால் எவரும் ஏழையாவதில்லை. -இத்தாலி கடவுள் பெயரால் பிச்சை கேட்பவன் இருவருக்காகப் பிச்சை கேட்கிருன். -ஸ்காட்லந்து பிச்சையெடுக்கத் தெரிந்தவன், வெளியே செல்லும் பொழுது , தன் பணத்தை வீட்டில் வைத்துவிட்டே செல்லலாம். -லெக் பிச்சைக்காரர் சமூகத்தைப் போன்ற பெரிய சமூகம் வேறில்லை . -ஸெக் பிச்சைக்காரன் கூச்சப்பட்டால், பை காலியாகவே இருக்கும். -ரஷ்யா பிச்சைக்காரன் சொத்து அவனுக்குத்தான் தெரியும். --ரவி:யா ந ல் வினை நல்லது அரிதாய்த்தான் இருக்கும். -ஸ்பெயின் நல்ல மனிதன் மற்றவர்களையும் நல்லவராக்குகிருன். -கிரீஸ் இன்ன செய்வதைப் பார்க்கினும், அதை ஏற்றுக்கொள்வதே மேல். -லத்தீன் இன்ன செய்யவே தெரியாதிருத்தல் நல்ல மனிதனுக்கு அடையாளம், -லத்தீன்