பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 இரண்டு பேர்களே நல்லவர்கள்: ஒருவன் இறந்து_போய் விட்டான், மற்றவன் பிறக்கவேயில்லை. -இந்தியா நல்ல செயல்களைச் செய்பவனைவிட (பலர்) அவைகளைச் செய்யக் காரணமா யிருப்பவன் மேலானவன். -யூதர் தண்ணிர் பள்ளத்திற்குப் பாய்வதுபோல், மனிதனின் இயற்கை நன்மை செய்தல். -கன்ஃபூவியஸ் தன் குழந்தை உள்ளத்தை இழக்காதவனே நல்ல மனிதன். -கன்ஃபூவியஸ் மற்ற மக்களுக்கு நன்மை செய்வதே ஒருவன் சமுதாயத்திற்குச் செலுத்தவேண்டிய கடன். -ஹறிந்து தர்மம் பலர் மிகவும் நல்லவர்; ஏனென்ருல் அவர்களால் தீமை செய்ய இயலாது. ை-ஃபிரான்ஸ் தீமைக்குப் பூட்டுக்களாயும், நன்மைக்குத் திறவுகோல்களாயும் உள்ள மனிதர்கள் இருக்கிருர்கள். -எகிப்து பாலிலிருந்து வெண்ணெய் வருவதுபோல, நல்லதிலிருந்து நல்லதே விளையும். -ஆப்பிரிக்கா கோயிலில் மூன்று நாள் உபவாசம் இருப்பதைவிட ஒரு நல்ல செயல் மேல். -ஜப்பான் அந்தச் சிறு மெழுகு திரி எவ்வளவு தூரம் ஒளி வீசுகின்றது! அவ்விாறே இந்த வம்பு நிறைந்த உலகில் ஒரு நல்ல செயல் பிரகாசிக்கின்றது. -ஷேக்ஸ்பியர் நல்ல வினைக்கு வெகுமதி அதைச் செய்து முடித்ததுதான். -இங்கிலாந்து நாம் நம் செயல்களைத் தீர்மானிப்பது போலவே அவைகளும் நம்மைப்பற்றித் தீர்மானிக்கின்றன. -இங்கிலாந்து செய்வோம் அல்லது செத்து மடிவோம். -பர்ன்ஸ் செயல்தான் மிகச் சுருக்கமான பதில். -இங்கிலாந்து நாம் செயல்களில் வாழ்கிருேம், ஆண்டுகளில் அல்ல. -( , வாழ்க்கையில் வாழ்வதைக் காட்டிலும் செயல்தான் அவசியப் -ஃபிரான்,