பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 செயல்களே வாழ்க்கைக்கு வலிமையளிக்கின்றன. -ஜெர்மனி செயல்கள் ஆண்கள், சொற்கள் பெண்கள். -இத்தாலி ஒரு நல்ல செயலுக்கு வெகுமதி கிடைத்தால் தான் மனிதர் அதை மதிக்கின்றனர். -லத்தீன் ஒவ்வொரு மனிதனும் தன் செயல்களின் மைந்தன். -ஸ்பெயின் நேர்மையாளரின் செயல்களைத் தேவர்கள் கவனிக்கின்றனர். -லத்தீன் தீ வினை தவருன வழியில் எவ்வளவு தூரம் போய்விட்டாலும், திரும்பி விடு. -துருக்கி பாவங்களிலே அழுந்தியிருப்பவன் உயிருடன் புதைக்கப் பட்டிருக்கிருன். -பல்கேரியா திடீரென எவனும் முற்றிலும் தீயோனுவதில்லை. -லத்தீன் திய வழியில் வந்தது தீய வழியிலேயே போய்விடும். -இங்கிலாந்து ஒருவனுக்குத் தீங்கு செய்பவன் நூறு பேர்களே அச்சுறுத்து கிருன். -இங்கிலாந்து மனிதர் செய்யும் தீமை அவர்களுக்குப் பின்னலும் நிலைத் திருக்கும், நன்மை அவர்களுடைய எலும்புகளோடு புதைக்கப்படும். -ஷேக்ஸ்பியர் இங்குகளை மணலில் எழுது. நன்மைகளை சலவைத் கல்லில் օT(ԼՔ :) - -ஃபிரான்ஸ் நல்ல மனிதன் பழைய தீங்குகளை மறந்து விடுகிருன். -கிரீஸ் நாம் இழைக்கும் தீங்குகளும், நமக்கு இழைக்கப்படும் தீங்கு களும், ஒரே தராசில் நிறுக்கப்படுவதில்லை. -கிரீஸ் நீங்குகளுக்கு மாற்று அவைகளே மறத்தல். -லத்தீன்