பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பம் ஒநாயும் பள்ளத்தில் விழுந்துவிட்டால் அழும். -ஜெர்மனி எந்த விரலைக் கடித்தாலும் வலியிருக்கும். -ரவியா உன்னேயே இள்ளிக்கொண்டு பார், மற்றவர்களுக்கு எப்படி யிருக்குமென்று தெரியும். -ஜப்பான் கண்ணிரைவிட விரைவில் காய்வது எதுவுமில்லை. -லத்தீன் வாழ்க்கையின் மூன்று பெரிய துயரங்கள். இவை; இளமையி லேயே தந்தையை இழத்தல், நடு வயதில் மனைவியை இழத்தல், வயது காலத்தில் மைந்தர்கள் இல்லா திருத்தல். -சீன உனக்கு கடன்கள்_இல்லையானல், ஒரு நண்பனுக்குப் பிணையாக (ஜாமீகை) இரு உனக்குத் துன்பம் இல்ல்ையால்ை, ஒரு பழைய குதிரையை விலைக்கு வாங்கு. -திபேத்து (துன்பத்தை ஒருவன் தானகத் தேடிகொள்ளும் வழிகள்.) வாழ்வது கஷ்டமா யிருக்கிறது, சாவது அதைவிடக் கஷ்டமா யிருக்கிறது. -அல்பேனியா எல்லோருக்கும் பொதுவான துன்பத்தைத் தாங்குதல் எளிது. -ஐ. நா. இன்பம் ஏகாங்கி, துன்பத்திற்குத்தான் பரிவாரங்கள் அதிகம். -இத்தாலி கஷ்டத்தோடு போராடாதவனுக்கு நன்மை எது என்று தெரியாது. -ஸெர்பியா பூவில்லாமல் கலியாணமில்லை, கண்ணிரில்லாமல் இழவில்லை. -அமெரிக்கா வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிருன். -ஹாலந்து ஒரு நாள் முழுதும் இன்பம் அநுபவித்தலைப் போன்றது ஒருமணி நேரத் துன்பம் -இங்கிலாந்து பெருந் துன்பமும் சிறு லாபமும் மனிதனைக் களைப்படையச் செய்கின்றன. -இங்கிலாந்து தீய இன்பங்களுக்குச் செலுத்தும் கூலியே துன்பம். —(?” )