பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 நல்ல செய்தி கொண்டு வருகிறவன் கதவைப் போட்டுத் தட்டுவான். -இங்கிலாந்து இறந்தவனைத் தவிர எவனும் சுகமாயில்லை. -வேல்ஸ் கவலை நான் ரொட்டியை எண்ணவில்லை, என் ரொட்டிதான் என்னை உண்ணுகின்றது. (உணவுக்கு ரொட்டி வேண்டுமே என்ற கவலே ஆளை அரித்து விடுகின்றது. -இந்தியா பசுவும் கன்றும் இல்லாதவன் நன்ருகத் துரங்குவான். -( ' ) உனக்கு ஒரு தொந்தரவும் இல்லையா? அப்படியானல், ஒரு வெள்ளாட்டை வாங்கிக் கட்டு. ཟླ། ། -இந்தியா கவலை வாழ்வின் எதிரி. -ஷேக்ஸ்பியர் கவலை அழகை அபகரிக்கும். -இங்கிலாந்து கவலைகளால் தலைமயிர் நரைக்கும். -இங்கிலாந்து சொற்பக் கவலை பேசும். பெருங்கவலை மெளனமாயிருக்கும். -ளெலனிகா கவலையால் மனிதன் மரிப்பதில்லை, உலர்ந்து சருகாவான். -ரவி:யா வைக்கோல் இருக்கிறதா என்று பசுவுக்கு என்ன கவலை? -செர்பியா கவலையோடு உறங்கச் செல்வது முதுகிலே சுமையைக் கட்டிக் கொண்டு துரங்குவதாகும். -அமெரிக்கா படுக்கப் போகுமுன் கவலைகளைச் செருப்போடு கழற்றி வைக்க வேண்டும். -ஜெர்மனி கவலை நூறு வண்டி யிருந்தாலும், அது ஒரு கடனையும் அடைக்காது. -இங்கிலாந்து மானிடரின் விஷயங்களில் பெருங் கவலைக்குரியது எதுவு மில்லை, -பிளேட்டோ