பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அன்பின் உடன் பிறந்தவள் விசுவாசம். -ஜெர்மனி கண்ணிரோடு வழியனுப்புபவன் ஆனந்தத்தோடு வரவேற் பான். -போலந்து இரக்கம் இரக்கம் அன்போடு ஒத்தது. -இங்கிலாந்து நொந்த புண்ணில் வேல் கொண்டு குத்தலாமா? -தமிழ்நாடு வயிற்றை நிரப்பிவிட்டு முதுகில் பாரத்தை ஏற்று. -இந்தியா குருடர் பாலத்தை தாண்டுவதற்கு வழி காட்டுங்கள். -சீன அநாதைக் குழந்தைகளுக்கு இரங்குங்கள்; விதவைகளுக்கு உதவி புரியுங்கள்; முதியோரைப் பேணுங்கள்; குழந்தை களிடம் அன்பு காட்டுங்கள்; அல்லற்படுவோருக்கு உதவி செய்யுங்கள்; அபாயத்திலுள்ளவர்களைக் காப்பாற்றுங் «ΒΕ ΦΥΤ. -டாவோ இரக்கமும் அவசியமும் உயிர்களை ஒன்றுசேர்க்கின்றன. -இங்கிலாந்து அல்லற்படும் இடங்களிலெல்லாம் இரக்கம் காட்டுதல் நம் கடன். -இ.கிங்லாந்து ஒருவனுக்கு மற்றவர் இரக்கம் காட்ட வேண்டுமானல் அவன் மற்றவர்களுக்கு இரங்கவேண்டும். -இங்கிலாந்து அழகு சிதறிப்போகும், இரக்கம் நிலைத்திருக்கும். -இங்கிலாந்து கருணை கடவுள் அளிக்கும் பரிசு. -இங்கிலாந்து கல்லைவிடக் கடினமானது மனிதன் இதயம். -பல்கேரியா கோயிலுக்கு ஒரு ராத்தல் தங்கம் அளிப்பதைவிட, ஒரு துளி இரக்கம் மேலானது. -பல்கேரியா பயமில்லாத இடத்தில் இரக்கம் இராது. -எஸ்டோனியா சில சமயங்களில் இரக்கம் காட்டுவது கொடுமையாகும், கொடுமை இரக்கமாகும். -இத்தாலி