பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் இந்த உலகை விலையாகக் கொடுத்து, மறு உலகை வாங்கு: இரண்டும் உனக்கு உரிமையாகும். -அரேபியா FF 60) 35 பாத்திரமறிந்து பிச்சையிடு. -தமிழ்நாடு தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பாராதே. -தமிழ்நாடு சோற்றுப் பருக்கையை விட்டெறிந்தால் ஆயிரம் காக்காய். -தமிழ்நாடு ஈயாத கை சுவர்க்கத்தைப் பூட்டிவிடுகின்றது. -இந்தியா இவ்வுலகில் கொடுப்பது மறு உலகில் கிடைக்கும். -இந்தியா ஒரு கையால் இறைத்து இருகையால் வாரவேண்டும். -இந்தியா உலோபியின் கணக்கும்-தர்மம் செய்பவன் கணக்கும் வருடக் கடைசியில் ஒன்று போலிருக்கும். -இந்தியா நீ அளிக்கும் தானமே உன் கேடயம். -இந்தியா நீ செய்யும் தானம் உன் வழிச்செலவுக்கான கட்டுச்சோறு -இந்தியா தானம் கொடுத்தது ஒன்று ஆயிரமாக விளையும். -துருக்கி ஏழைகள் அடக்கத்தோடு தானம் செய்கிருர்கள்; செல்வர்கள் வெறுப்புடன் விட்டெறிகிருர்கள்: பெரிய மனிதர்கள் ஏசிக்கொண்டே கொடுக்கிரு.ர்கள். -சீன நீ தாராளமா யிருந்தால் பணக்காரகை முடியாது; பனக் காரன யிருந்தால் தாராளமாயிருக்க முடியாது. -சீன ஒளதாரியம் என்பது கேட்குமுன் நன்மை செய்தல். -அரேபியா