பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஈகையின் குறை ஈந்தவனே அதை எடுத்துச் சொல்லல். -அரேபியா கொடையாளன் ஈ ச னி ன் அருகிலுள்ளான்; மக்களின் அருகிலுள்ளான்; துறக்கத்தின் அருகிலுள்ளான்; நரகத் திற்கும் அவனுக்கும் வெகு துாரம். -சீன குதிரைமீது பரிசுகள் அனுப்புவோனுக்கு, ஒட்டகத்தின்மீது பரிசுகள் வரும். -சீன சொற்பமாகத் தானமளித்தல் கேவலமில்லை. ஒன்றும் கொடா மலிருப்பதற்கு அது மேலாகும். -சீன கொடு" என்ற சொல்லை ஒரு முறை கேட்பதைவிட, எடுத்துக் கொள்' என்ற சொல்லை ஆயிரம் முறை கேட்டல் இனிது. -சீன நல்லோர் தேடுவதெல்லாம். மேகங்களைப்போல், பிறருக்குக் கொடுப்பதற்கே. -பர்மா செல்வத்திற்கு அழகு ஈகை. -யூதர் திடகாத்திரமாயிருக்கும் பொழுது அளிக்கும் பொருள் தங்கம், ந்ோயில் அளிப்பது வெள்ளி, செத்தபின் அளிப்பது ஈயம். -Աէ:5ri ஏழைகளுக்குத் திறவாத வீடு வைத்தியனுக்குத் திறக்கும். -Աէ:5որ உன் பணப்பையை அவிழ்த்துவிடு; (பிறகு) கோணியைத் திற. (சிறு கொடை அளித்தாலும் அது பெருஞ் செல்வமாக வரும்.) m -யூதர் கரிய மேகம் அச்சுறுத்தும், வெள்ளை மேகம் மழை பொழியும். -கீழை நாடுகள் உடனே இல்லையென்னும் உலோபி காலம் கடத்திக் கொடுக்கும் தயாளனைவிட மேலானவன். —( " ) வெங்காயமானலும் பெருந்தன்மையுடன் கொடு. -ஆப்கானிஸ்தானம்