பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சொற்பமாய்க் கொடுப்பவன் இதயத்திலிருந்து கொடுக்கிருன், அதிகம் கொடுப்பவள் தன் செல்வத்திலிருந்து கொடுக் கிருன். -பாரசீகம் தாராளமுள்ள மனிதன் இறைவனின் நண்பன். -பாரசீகம் பறவைகளில்லாத மரம் மலட்டு மரம். -சயாம் தானம் கொடுத்துவிட்டு, எதையும் திரும்பப் பெருதவன் மனிதன்; கொடுத்தும் வாங்கியும் வருபவன் அரை மனிதன்; பெறுவதைத் தவிரக் கொடுத்தறியாதவன் மனிதப் பிறவியே அல்லன். -சூஃபி றுெ கொடைகளே சிறந்த கொடைகள். -ஃபிரான்ஸ் தானம் கொடுங்கள், உங்கள் குழந்தைகள் பிச்சையெடுக்க நேராது. -ஜெர்மனி கொடுப்பவன் வந்தால், கதவு தானகத் திறக்கிறது. —(?” ) இறைக்கிற கிணறுகளில் நீர் வற்ருது. -இங்கிலாந்து ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டும் அளவு கிடையாது. -வேல்ஸ் நாளைக்கும் தானம் செய்யும் நிலையிலிருப்பதற்காக இன்று தானம் செய்யுங்கள். -டென்மார்க் எனக்குக் கொடையளிப்பவன் நானும் பிறருக்கு அளிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிருன். - வேல்ஸ் அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்குரிய ஒரு பங்கு இருக்கிறது. -எஸ்டோனியா எனக்குக் கொடுப்பதற்காகவே கடவுள் உனக்குக் கொடுத் திருக்கிரு.ர். -ஆப்பிரிக்கா மனிதர்களுக்குச் செய்யும் உதவிகள் கடகைக் கொடுப்பவை: வம்பர்களுக்குக் கொடுப்பதுதான் தர்மம். -ஆப்பிரிக்கா சுவர்க்க வாயிலைத் திறக்கும் திறவுகோல் ஈகை. -இங்கிலாந்து ஈகை இதயத்தின் பண்பு, கைகளின் பண்பன்று. -இங்கிலாந்து