பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கடவுள் மூளையையும் அழகையும் சேர்த்துவைப்பதில்லை.

-ரஷ்யா

கடவுளின் கிருபை இருந்துவிட்டால், ஒருவனுடைய நாய் பத்துப் பன்றிக் குட்டிகளை ஈனும். - ரஷ்யா கடவுள் எல்லாவற்றையும் எல்லோருக்குமாகக் கொடுத்திருக்கிறார், ஒருவருக்காக அல்ல. -ரஷ்யா உழுபவனுக்கு ஆண்டவன் துணை உண்டு. - ரஷ்யா கடவுள் நினைத்தால், சேவலும் முட்டையிடும். - ரஷ்யா இறைவன் நல்ல உழைப்பாளி, ஆனால் அவன் (நம்) உதவியை நாடுகிறான். - பாஸ்க் கர்த்தர் பாவமற்றவரல்லர், ஏனெனில், அவரே உலகைப் படைத்திருக்கிறார். - பல்கேரியா கடவுள் தேவர்களோடு வாழ்கிறார்; மனிதன் மனிதர்களோடு வாழ்கிறான். - பல்கேரியா தன் கடவுளை அறியாத மனிதன் கடலுக்குப் போனால் தெரியும். - ஃபின்லந்து

வானத்தில் கடவுள் இருக்கிறார்; பூமியில் புல் இருக்கிறது.

-ஐஸ்லந்து

கடவுள் தம்மை நோக்கி வருபவனிடம் தாமே செல்கிறார்.

-ரஷ்யா

கடவுளோடு கடலிலும் செல்லலாம், அவரில்லாமல் வாயிற் படியையும் தாண்ட வேண்டாம். -ரஷ்யா கடவுளை நோக்கிச் செல்லு, நல்ல சாலையைக் காணலாம். -ரஷ்யா இறைவனுடன் எவரும் ஒப்பந்தம் செய்வதில்லை. -ரஷ்யா

ஈசன் விரும்பும் பொழுது, நீரும் நெருப்புப் பற்றி எரியும்.

-ரஷ்யா

கடவுள் தொழிலாளியுடன் இருக்கிறார். - செர்பியா