பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தங்கம் சுத்தமாயிருந்தால், அது நெருப்புக்கு அஞ்சு வானேன்? -ஆப்பிரிக்கா இதயத்தில் சுத்தமாயிருப்பவர்கள் பாக்கியசாலிகள்: ஏனெ சி) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியும். -புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களுக்கு எல்லாப் பொருள்களும் பரிசுத்தமே. -புதிய ஏற்பாடு எத்தனையோ அசுத் தங்களைத் தாண்டிச் செல்லும் சூரியன் தான் பரிசுத்தமாகவே இருக்கிறது. -பேக்கன் பத்து முறை சுத்தம் செய்வதைவிட, சுத்தமாகவுே - வைத் திருத்தல் மேலானது. -இங்கிலாந்து கடவுள் நிறைந்த கைகளை வேண்டவில்லை; சுத்தமான கைகளையே வேண்டுகிரு.ர். -இங்கிலாந்து வாரியுள்ள தலை மற்றக் குறைகளை மறைக்கிறது. -அயர்லந்து கடவுள் ஏழையை நேசிப்பார், ஆனல் அசுத்தமானவனே நேசிக்க மாட்டார். -ஸ்பெயின் ஒவ்வொருவரும் தம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால், தெரு சுத்தமாகிவிடும். -யூதர் அ ழ கு அழகுள்ள பொருள் அழிவில்லாத இன்பம். -கீட்ஸ் அழகே உண்மை, உண்மையே அழகு. -கீட்ஸ் இயற்கையின் நாணம் அழகு. + -மில்டன் தங்கத்தைவிட அழகை நாடித் திருடர்கள் விரைவிலே வருவர். -ஷேக்ஸ்பியர் அழகு இறைவனின் அன்பளிப்பு. -அரிஸ்டாட்டில் தீபங்கள் அணைந்த பின்பு, எல்லாப் பெண்டிரும் அழகுள்ள வர்கள். -புளுடார்க் தேவையில்லாதவைகளை நீக்கிவிடுதலே (கலையின்) அழகு. -மைக்கேல் ஏஞ்சலோ