பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஒரு தெள்ளுப் பூச்சிக்காக ஒருவன் கம்பளிகளை எரித்து விட்டான். -அல்பேனியா நாம் ஒருவருக்கொருவர் மூடராயிருக்கிருேம். -இங்கிலாந்து சேற்றிலுள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூட னுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும். -அயர்லந்து மூடன் மேற்கொள்வது சிறு காரியமா யிராது. -ளெலக் மூடர்கள் குடியேறி வந்தால், கிராமம் செழிப்பாயிருக்கும். -டென்மார்க் காலியாயுள்ள தலைகள் எப்பொழுதும் நிமிர்ந்தேயிருக்கும். -எஸ்டோனியா மூடன் சிதறுகிருன், அறிவாளி பொறுக்குகிருன். -ஜ்யார்ஜியா வைக்கோலைக் கொண்டு நெருப்பை அணைக்க முடியாது. -போர்ச்சுகல் கம்பளத்திற்காக ஆட்டைக் கொல்லாதே. -ரஷ்யா குரங்கு உட்கார்ந்திருக்கும்வரை அதற்கு வாலில்லை என்பது தெரியாது. -சைலீஷியா ஒவ்வொரு மூடனும் ஒரு கழியுடன் நடக்கத் தொடங்கில்ை விறகுப் பஞ்சம் வந்துவிடும். -ஸ்பெயின் அறியாமையைப்போல் வேறு எதற்கும் அவ்வளவு துணிவு கிடையாது. -ஸ்பெயின் மூளையில்லாத தலைக்குத் தொப்பி தேவையில்லை. -ஸ்பெயின் மூடன் கருங்காலி மரத்தை வெண்மையாக்க முடியாமல், தந்தத்தைச் கறுப்பாக்க முயலுவான். -ஆப்பிரிக்கா பேதைமை நீர் ஊற்ருமலே வளரும். -இங்கிலாந்து பேதைமை துக்கமானல், ஒவ்வொரு வீடும் அழும். — ” ) தன் குறையைக் கணடுபிடித்தல் அறிவின் சிகரமாகும் - ( ' ) காய்ந்த தரையில் மூழ்கிச் சாவது அறிவீனம். -இங்கிலாந்து நாற்பது வயதிலும் மூடயிைருப்பவன் உண்மையான_மூடன் தான். -இங்கிலாந்து முட்டாள் அமைதியா யிருக்க முடியாது. -இங்கிலாந்து