பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i89 அறிவிலி ஒரு மணி நேரத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அறிவாளி ஏழு ஆண்டு பதில் சொன்னலும் முடியாது. -இங்கிலாந்து மூடனுடைய சுவர்க்கம் அறிவாளியின் நரகம். -இங்கிலாந்து புத்தியுள்ளவர்கள் வேடிக்கை பார்க்கவே மூடர்கள் இருக்கிருர் கள். -இங்கிலாந்து எல்லா மூடர்களும் வெள்ளைத் தொப்பி அணிந்தால், நாம் அனைவரும் வாத்துக் கூட்டமாகக் காணப்படுவோம். --இங்கிலாந்து மூடர்கள் சந்தைக்குப் போகாவிட்டால், கெட்ட சரக்குகளை விற்க முடியாது. -இங்கிலாந்து வீட்டுக்கு ஒரு முட்டாள் போதும். -இங்கிலாந்து உலகம் மூடர்களும் வஞ்சகர்களும் நிறைந்தது. -இங்கிலாந்து ஒன்றும் தெரியாதவன் எதையும் சந்தேகிக்க மாட்டான். -இங்கிலாந்து கொஞ்சம் தெரிந்தவன் அதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பான். -இங்கிலாந்து அறியாமையால் நாம் வாழ்நாளைக் குறைத்துக் கொள்கிருேம். -இங்கிலாந்து அறியாமையின் விபரீதம் என்ன வென்ருல், அதிலேயே திருப்தி யடைதல். -இங்கிலாந்து சிறு ஒடையைத் தவிர்ப்பதற்காக ஒருவன் ஆழமான ஆற்றில் குதிக்கிருன். -இங்கிலாந்து அறியாமையைத் தவிர இருள் வேறில்லை. -ஷேக்ஸ்பியர் பேதமையின் சிறகுகள் கழுகு போலிருக்கும்; ஆனல் கண்கள் ஆந்தை போலிருக்கும். -ஹாலந்து மூடர்கள் வீடுகள் கட்டுகிருர்கள்; அறிவாளிகள் அவைகளை வாங்குகிருர்கள். -ஹாலந்து முதியோர் மூடராயிருக்கையில், குழந்தை தவறு செய்யக் கற்றுக் கொள்கின்றது. -ஜெர்மனி பேதைக்குப் புத்திதான் சொல்லலாம், தண்டித்தல் நலமன்று. -லத்தீன்