பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகள் பழைய சொற்கள் அறிவுக் களஞ்சியம். -அமெரிக்கா பழைய மொழிகள் பொய்களல்ல. -அமெரிக்கா இருளில் தீவர்த்திகள் போன்றவை பேச்சில் பழமொழிகள். -அமெரிக்கா நல்ல பழமொழி எந்த நேரமும் பயனளிக்கும். -அமெரிக்கா உலகத்தில் நல்லறிவெல்லாம் பழமொழிகளுக்குள் அடக்கம். -இங்கிலாந்து அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள். -இங்கிலாந்து சிறு அறையில் அளவற்ற செல்வங்கள் குவிந்திருப்பது போன்றவை பழமொழிகள். -இங்கிலாந்து படிப்பிலே அடிக்கடி பழமொழிகளையும் பார்க்க வேண்டும். -இங்கிலாந்து ஒரு சமுதாயத்தின் மனப் போக்கைப் பழமொழிகளைவிட வேறு எதுவும் எடுத்துக் காட்டுவதில்லை. -இங்கிலாந்து துக்கத்தைப் பழமொழிகளால் ஆற்றிக் கொள்ளவும். -ஷேக்ஸ்பியர் சிறு வாக்கியங்களில் நம் முன்னேர்கள் வாழ்க்கையை அடைத்து வைத்திருக்கின்றனர். -இங்கிலாந்து பழமொழிகள் மக்களின் குரலைத் தவிர வேறென்ன? - ( ' ) பழமொழி பலருடைய அறிவு, ஒருவருடைய சாதுரியம். -ஜான் ரஸ்ஸல் பழமொழியை எதுவும் வெல்ல முடியாது. -அயர்லந்து பழமொழிகளை (எவரும்) மறுக்க முடியாது. - -அயர்லந்து பழைய மொழிக்கு மேற்சொல் இல்லை. -அயர்லந்து ஜனங்கள் எப்படி, பழமொழியும் அப்படி.. -ஸ்காட்லந்து உன் கப்பலைத் துறைமுகத்துள் கொண்டு வரும்வரை உன் பழமொழியைக் கூருதே. -ஸ்காட்லந்து ஒவ்வொரு பழமொழியும் உண்மை: ஒவ்வொரு செய்தியும் பொய். -ஸ்காட்லந்து