பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வேலி தணிந்திருந்தால் எவனும் தாண்டி வருவான். -எஸ்டோனியா பூட்டு என்பது விலங்குகளைத் தடுக்கும் பாதுகாப்பு, ஆல்ை மனிதனைத் தடுக்கும் பாதுகாப்பே யில்லை. —( " ) ஒவ்வொரு சாலைக்கும் இரண்டு திசைகள் உண்டு. -ரஷ்யா பூட்டு யோக்கியனைக் கருதியே செய்யப்பட்டது. (திருடர் களிடமிருந்து பூட்டு காக்க முடியாது.) -யூதர் கதவைத் திறந்து போட்டுவிட்டால், திறந்த வெளியில் படுத்த மாதிரி. -ஆப்பிரிக்கா நீ இறக்கும்பொழுது உனக்காக அழக்கூடியவர்களை, உயிருள்ள போதே நீ தேடி வைத்துக்கொள்ள வேண்டும். -எகிப்து ஒரே மரத்தின் பக்கம் நீ இருமுறை வந்தால், நீ வழி தவறி விட்டாய். -ஆப்பிரிக்கா இருட்டிலே ஜனங்கள் ஒருவர் துணியை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். -ஆப்பிரிக்கா முக்கியம் தலை இருந்தால், தலைப்பாகைக்கா பஞ்சம்? -இந்தியா வேரைவிட எந்தக் கிளையும் முக்கியமில்லை. -ஜப்பான் அவசியம் நேர்ந்தால் பன்றியும் மாமகுைம். -அல்பேனியா பிடியில்லாத கோடரியைக் கண்டு காடு அஞ்சாது. -பல்கேரியா அவசியம் வந்தால், ஒருவன் புதிதாக வழி கண்டுபிடிப்பான். -ஸ்பெயின் நிர்வாணமான பெண்களுக்கு, தேவை நூல் நூற்கக் கற்பிக்கும். -டென்மார்க் ரொட்டியை மென்றபிறகு பற்கள் தேவையில்லை. -எஸ்டோனியா தடுமன் வரும்போது நிலக்கரியைத் திருடக் கற்பிக்கிறது. -எஸ்டோனியா