பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பண்பு பரம்பரையாக வருவதில்லை. -சீன

  • † : نیت است

பண்பு இருந்தால், பாரையே வெல்லலாம். -சீன சாம்ராஜ்யத்தின் மேன்மைக்குப் பண்புதான் அடிப்படை. கடுமையான பயிற்சியில்லாமல் ஒருவன் ஒழுக்கமாயிருக்க முடியாது. -இங்கிலாந்து பண்பில்லாதவன் ஆடையில்லாதவன். -இங்கிலாந்து ஒழுக்கத்தை விற்றுச் செல்வம் தேடவேண்டாம். —( * } பண்பு ஒன்றுதான் (உண்மையான) சொத்து. -இங்கிலாந்து பண்பும் இன்பமும் அன்னையும் மகளும். -இங்கிலாந்து ஒழுக்கம் உள்ளத்தில் உறைவது, நாக்கிலன்று. -இங்கிலாந்து ஒழுக்கமே உயர்குடிக்கு உரிமை யளிப்பது. -இங்கிலாந்து ஒழுக்கத்திற்கு ஒருபோதும் மூப்பில்லை. -இங்கிலாந்து பண்பின் பயன் பண்புதான். -இங்கிலாந்து மதங்கள் பல, ஒழுக்கம் ஒன்றுதான். -இங்கிலாந்து இழந்த பிறகு பெறுவதைப் பார்க்கினும், இருக்கும் ஒழுக் கத்தைக் காப்பது மிகவும் எளிது. -இங்கிலாந்து நமக்குள்ளேயே நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. -இங்கிலாந்து நல்ல நடத்தைதான் வாழ்க்கையின் முக்கால் பகுகி, அதுவே முதன்மையானது. -இங்கிலாந்து யோக்கியதையை இழந்தவன் எல்லாம் இழந்தவன். —( " ) இலாபத்திற்கும் நேர்மையே முதன்மையான வழி. —( " ) மக்சளின் தீயொழுக்கங்கள் பித்தளையில் எழுதப்பெறும் ; நல்லொழுக்கங்கள் நீரில் எழுதப்பெறும். -ஷேக்ஸ்பியர் பண்பு எப்பொழுதும் சிறுபான்மைக் கட்சியாகவே இருக்கும். -ஃபிரான்ஸ்