பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பொய் சொல்லுதல் மனித இயல்பு, அதை நம்புகிறவனுக்குத் தான் கேவலம். -அரேபியா உளுத்துப்போன பொருள் மிதக்கும்; பொய் வதந்தி உடனே பரவும். -பர்மா பொய்யனுக்குத் தண்டனை, அவன் உண்மையைச் சொல்லும் போதும், எவரும் நம்பாமலிருப்பதுதான். -யூதர் பொய் ஒற்றைக் காலில் நிற்பது: உண்மை இரு கால்களில் நிற்பது. - -யூதர் பொய்யனுக்கு ஒரு முறைதான் இலாபம். -கீழ் நாடுகள் பொய்யான உண்மைகளும், மெய்யான பொய்களும் உண்டு. -இங்கிலாந்து உண்மை வெளியாகிவிட்டால், பொய்களின் நாடு பொசுக்கப் படும். -ஆப்பிரிக்கா பொய்க்கும் மெய்க்கும் இடையில் ஒரு மயிரிழைதான் உண்டு. -பாரசீகம் ஒரு பொய் ஆண்டவனின் ஒரு சாபமாகும். -பல்கேரியா பொய்யன் நினைவோடு பொய்சொல்ல வேண்டும். -ஸ்ெக் புண்படுத்தும் மெய்யைவிடப் புண்ணே ஆற்றும் பொய் மேல் -ஸெக் பொய்கள் அமர்வதற்கு ஒருவன் சிம்மாசனம் அமைத்தால். உண்மைக்குத் துாக்குமேடை அமைத்ததாகும். -ரஷ்யா பொய்களாகிய குளத்தில் செத்த மீன்களே மிஞ்சும். -ரஷ்யா பொய் சொல்லும் பொழுது நீயே அதை உண்மையென்று நம்பும்படி சொல்லு. -ரவியா அவசியமான காலத்தில் பொய்யும் மெய்போலவே பயன்படும். - -ஸ்வீடன் ஒரு பொய் ஈட்டியைவிட வேதனையளிக்கக் கூடும். -ஆப்பிரிக்கா "அவர்கள் சொல்லுகிருர்கள்' என்பது பொய்யின் தம்பி. -ஆப்பிரிக்கா பொய்யன் உலகத்தைச் சுற்றிப் போக முடியும், ஆனல் திரும்பி வர முடியாது. -போலந்து