பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கம் தானே தன்னை உயர்வாகப் பேசிக்கொள்பவன் தாழ்த்தப் படுவான்; தன்னைப் பணிவாக்கிக் கொள்பவன் உயர்த்தப் படுவான். -புதிய ஏற்பாடு எவனும் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், இடது கன்னத்தையும் அவனுக்குத் திருப்பிக்காட்டு. -புதிய ஏற்பாடு அதிகமாய்க் காய்த்திருக்கும் கிளைகளே மிகவும் தாழ்ந்திருக்கும். -இங்கிலாந்து அடக்கமான இதயம் அனைவருடைய அன்பையும் பெறும். -இங்கிலாந்து உன்னை ஆட்டுக்குட்டியாக ஆக்கிக்கொண்டால், ஒநாய் உன்னைத் தின்றுவிடும். -ஃபிரான்ஸ் அதிகப் பணிவு செருக்காகும். -ஜெர்மனி செருக்கைவிடப் பணிவுக்கு லாபம் அதிகம். -லத்தீன் உன்னிலும் மேலானவர்களுக்கு வழிவிடு. -லத்தின் முப்பது பற்களுக்கு நடுவில் ஒற்றை நாக்கு சுகமாயிருக்கிறது. -இலங்கை நிலைப்படி தணிவாயிருந்தால், தலையைக் குனி. -சீன உன்னேப் பற்றி நீயே உயர்வாகவோ, குறைவாகவோ பேச வேண்டாம்: உயர்வாய்ப் பேசினால், மக்கள் உன்ஆன நம்பமாட்டார்கள்; தாழ்வாய்ப் பேனல், நீ சொல்வதை விட அதிகத் தாழ்வாக எண்ணுவார்கள். -கீழ் நாடுகள் சிப்பி அடங்கிக் கிடந்த பின்னரே, அதில் முத்துக்கள் நிறைந்தன. -பாரசீகம் நீ பின்னல் இரு முன்னல் கொண்டுவந்து நிறுத்தப்படுவாய்: நீ வெளியே இரு உள்ளே அழைத்துச் செல்லப்படுவாய். -டாவோ பெஞ்சியின்மேல் அமர முடிந்தவர்கள் அதனடியிலும் அமரத் உடைந்தவாள் உறையிலேயே கிடக்கட்டும். -ஜெர்மனி