பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இழந்துபோன பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.

-ஸ்பெயின்

(பசுவை இழ்ந்துவிட்ட ஒருவன், அது அகப்பட்டால் தன் குழந்தைகளைச் சேரவேண்டுமென்றும். அகப்படாவிட்டால் கடவுளைச் சேரவேண்டுமென்றும், உயில் எழுதி வைத்தானாம்.)

பிரார்த்தனையால் கிடைக்கும் பொருளுக்கு மேலாக அருமையுள்ளது எதுவுமில்லை. -ஸ்பெயின் கடவுளிடம் பிரார்த்தனை செய், அவருக்குச் சலிப்பே கிடையாது. -ஆப்பிரிக்கா கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீ குழந்தைக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. -ஆப்பிரிக்கா கடவுள் கடலைப் படைத்தார், நாம் கப்பலைப் படைக்கிறோம்; அவர் காற்றைப் படைத்தார். நாம் பாய்ச்சீலையைப் படைக்கிறோம். -ஆப்பிரிக்கா அவர் அமைதியைப் படைத்தார், நாம் துடுப்புகளைப் படைக்கிறோம். -ஆப்பிரிக்கா

மரக்கட்டைச் சாமிக்குச் சப்பாத்துக்கட்டை காணிக்கை.

- இந்தியா

கோதுமை மலிவானால், வீடுதோறும் பூசை நடக்கும். -( " )

நம்பிக்கையில்லாமல் பிரார்த்தனை செய்பவன் தன் முறையீடுகள் நிறைவேற்றப்படுமென்று நம்பமுடியாது.

- ஃபிரான்ஸ்

இறைவனிடம் நன்றியுள்ள ஒரு சிந்தனையே முழுப் பிரார்த்தனையாகும். - ஜெர்மனி

கல்விப் பயிற்சியில் சிறந்த பாதி நன்றாகப் பிராத்தனை செய்தல்.

-லூதர்

உனக்காகப் பிரார்த்தனைச் செய்ய வேண்டாம். உனக்கு எது நன்மை என்பது உனக்கே தெரியாது. - கிரீஸ் கடவுள் கோபமா யிருந்தால், பிரார்த்தனையின் குரலால் இளகி விடுகிறார். -லத்தீன்