பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கம் ஒரு வழக்கம் அழிவதினும் ஒரு கிராமமே அழிவது மேல். -அல்பேனியா வழக்கம் இரண்டாவது சட்டம். -இத்தாலி வழக்கம் சட்டத்தைவிட வன்மையுள்ளது. -இத்தாலி உணவிலும் உடையிலும் விதிகளின்படி நட. -சீன வழக்கம் ஒன்றிருந்தால், அதை மாற்ற முயலாதே; வழக்கமே இல்லாவிட்டால், புதிதாக ஒன்றைத் திணிக்கவேண்டாம். -சீன பழக்கம் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? -தமிழ்நாடு குதிரையைப் பார்த்தவுடன் பிரயாணி நொண்டியாகி விடுகிருன். -இந்தியா தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். -தமிழ்நாடு தேசம் தோறும் ஆசாரம் வேறு. -தமிழ்நாடு பண்டத்தையும் பழக்கத்தையும் உடைக்க வேண்டும். -பிரான்ஸ் ஒரு முறை செய்தால், பின்பு பழக்கமாகும். -இங்கிலாந்து பழக்கங்கள் முதலில் சிலந்தி வலைபோல் (மென்மையாக) இருக்கின்றன. பிறகு இரும்புக் கம்பிகளாகி விடுகின்றன. -இங்கிலாந்து பழைய வண்டிக்காரன் சவுக்கின் சுண்டுதலையே கேட்க விரும்பு கிருன். -இங்கிலாந்து சிந்தனையற்ற கூட்டத்தைப் பழக்கமே ஆள்கின்றது. -வோர்ட்ஸ்வொர்த் பழக்கமே நம் இரண்டாவது இயற்கையாக இருக்கிறது. -மாண்டெயின்