பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மனிதர்களின் இயற்கை ஒரே மாதிரித்தான்; அவர்களுடைய பழக்கங்களே அவர்களை வெகுதுாரம் பிரித்து விடுகின்றன. மனிதர் பழக்கங்களாலான ஒரு பிராணி. -ஜெர்மனி பழக்கம் அற்பமானதன்று. -கிரிஸ் ஆணியை ஆணியால் அகற்றுவது போல், பழக்கத்தைப் பழக்கத்தால் நீக்க வேண்டும். -லத்தீன் பழக்கமே பின்னல் குணமாக அமையும். -லத்தீன் பழக்கமில்லாமல் பல் துலக்கவும் முடியாது. -இலங்கை தவிடு திருடிய கை தனத்தையும் திருடும். -இந்தியா நாற்றம் பிடித்தவர்களுக்குத் தங்கள் சொந்த வாடை தெரியாது. -ஜப்பான் கோடரியால் தலையில் அடிபட்டவனுக்குப் பின்னல் தண்டாயுதத்தால் அடிபடுவதில் மகிழ்ச்சி. -சீன சிறு வயதில் ஊசி திருடிப் பழகியவனே வயதான பின் பணத்தையும் திருடுவான். பழைய கிண்ணத்தில் பால்வாடை இருந்து கொண்டே யிருக்கும். -ஆப்பிரிக்கா பழக்கம் என்பது (ஐம்புலன்களுக்கு மேல்) ஆருவது புலகுைம்: அது மற்றைப் புலன்களையும் அடக்கி மேலெழுந்துவிடும். -அரேபியா முட்டை திருடுபவனே பின்னல் ஒட்டகம் திருடுவான். -பாரசீகம் வெங்காயம் விற்பவனுக்கு அதன் வாடை தெரியாது. -ஜெர்மனி சிறு நகரங்களில் மூக்கைப் பார்த்தே ஆளைச் சொல்லி விடுவர். -ஜெர்மனி தாடியுள்ளவனிடம் சீப்பும் இருக்கும். -அல்பேனியா கதையால் அடிபட்ட பிறகு, தடிக்கம்பு உறைக்காது. -பல்கேரியா பழக்கம் இரும்புச் சட்டை அணிந்திருக்கும். -ஸ்ெக்