பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அவர்களால் (வேலை) முடியும், ஏனெனில் தங்களால் முடியு மென்று அவர்கள் கருதுகிருர்கள். -வர்கில் நாம் எல்லோரும் எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது. -வர்கில் முற்றும் நனைந்தவன் மழைக்கு அஞ்சுவானேன்? -இந்தியா திறமையுள்ளவன் பின்னல் திறமையுள்ளவர்கள் நிற்பார்கள். நெருப்பில் தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான். -இந்தியா விளையாடுவதற்குத் திறமை வேண்டாம், அதை நிறுத்து வதற்குத் திறமை வேண்டும். -போலந்து ஒருவன் தலைக்குமேல் உயரமாகத் துள்ள முடியாது. -ஃபின்லந்து முட்டை கல்லை உடைக்காது. -அரேபியா அசுரனைப் போன்ற வல்லமை பெற்றிருப்பது நல்லதுதான்; ஆனல் அதை அசுரனைப் போலவே உபயோகித்தல் கொடுமையாகும். -ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சி அறிவில்லாத உடல் வலிமை தன் கனத்தாலேயே தாழ்வுற்று விடும். -லத்தீன் பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகிக்க வேண்டும். -லத்தீன் வல்லமை மிகுந்தவனே வெல்கிருன். -லத்தீன் வ லி ைம வல்லவறுக்குப் புல்லும் ஆயுதம். -தமிழ்நாடு வல்லமையுள்ளவன் முரட்டுத்தனத்தை அடக்கிக் கொள்வது கடினம். -ஜப்பான் வல்லவ மணலிலும் பம்பரம் விடுவான். -ஜப்பான் அடிக்கிறவறுக்கு ஆயுதம் எளிதில் கிடைக்கும். -ஃபின்லந்து பெலி| குதியை மீதுதான் ஈக்கள் இருக்கும். -செர்பியர் யானையின் உதையை யானேதான் தாங்க முடியும்.-ஆப்பிரிக்கா