பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 வாயில் இருக்கிறது வழி. -தமிழ்நாடு ஒருவன் உள்ளத்தை அறியவேண்டுமானல், அவன் சொற்களைக் கவனி. -8ளு அரசர்களும் அழகிகளும் எவ்வளவு குறைவாகப் பேசுகிருர் களோ அவ்வளவுக்கு விஷயங்கள் அதிகமாயிருக்கும். நாக்கின் அடியில் மனிதர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிருர்கள். கவலைகள் குறைந்தால், கனவுகள் குறையும்; கனவுகள் குறைந்தால், குற்றங்கள் குறையும். -சீன நான் (செவி கொடுத்துக்) கேட்டால், எனக்கு நன்மை; நான் பேசினால், பிறருக்குத்தான் நன்மை. -அரேபியா இதயம் இரகசியங்களின்_இருப்பிடம், உதடுகள் பூட்டுக்கள். நாவு அவைகளின் திறவுகோல். -அரேபியா நீண்டகாலச் சிறைத் தண்டனைக்கு உரியது நாவுதான். -அரேபியா நீ வாயைத் திறக்கும் பொழுது, கண்களும் விழிப்பா யிருக்கட்டும். -ஆர்மீனியா மேடை ஏறியவனெல்லாம் பிரசங்கியாகிவிட மாட்டான். -கீழ் நாடுகள் ஆயிரம் சொற்களைக் கேட்டுக்கொள். நீயும் ஒரு வார்த்தை பேசு. -கீழ் நாடுகள் பேச்சு சிம்மத்தைபோல் வீரமா யிருக்கவேண்டும், முயலைப் போல் மென்மையா யிருக்கவேண்டும், நாகத்தைப் போல் கம்பீரமா யிருக்கவேண்டும், அம்பைப்போல் கூரியதா யிருக்கவேண்டும், தராசு முனைபோல் நடுநிலையில் இருக்க வேண்டும். -கீழ்நாடுகள் விஷயமே இல்லாமல் ஒருவன் வெகு நேரம் பேசிக்_கொண் டிருக்க முடியும். -ஜெர்மனி பேசத் தெரிந்தவனுக்கு எல்லா, இடங்களும் சொந்த இடம் போன்றவை. -ஜெர்மனி உன்னை நான் தெரிந்து கொள்ளவேண்டும்-கொஞ்சம் பேசு! -ஜெர்மனி