பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 நீ சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால், அதைச் சொல் வதற்கு உனக்குள்ள உரிமையை நான் உயிரைக் கொடுக் தும் காப்பேன். ■ -வால்டேர் அதிகப் பேச்சும் பொய்யும் நெருங்கிய உறவினர்தாம். -ஜெர்மனி செல்வத்தைவிடப் பேச்சைப் பாதுகாத்தல் நலம். -கிரீஸ் பேசுபவன் விதைக்கிருன், கேட்டவன் அறுவடை செய்து கொள்கிருன். -ரவி யா பேச்சினல் சோறு வேகாது. -சீன பேச்சு வெறும் பேச்சுத்தான்; பணம்தான் நிலம் வாங்கும். -இங்கிலாந்து சிந்தனை குறையக் குறைய மனிதர்க்குப் பேச்சு அதிகமாகும். -இந்தியா சிந்திக்காமல் பேசுதல் குறியில்லாமல் அம்பு விடுதலாகும். -இந்தியா மனிதர்கள் பேசட்டும்; நாய்கள் குரைக்கட்டும். -ஜெர்மனி அதிகப் பேச்சு, அதிக மடமை. -யூதர் அதிகம் பேசி அதிகத் தவறு செய். -ஸ்பெயின் அதிகப் பேச்சாளர் இருவர் நெடுந்துாரம் சேர்ந்து -போக முடியாது. -ஸ்பெயின் கு ண ம் பன்றியைக் குளிப்பாட்டி விட்டால், அது சாக்கடைக்கே திரும்பும். -ஸ்ெக் ஒநாயை அழைத்து எவ்வளவு உபதேசம் செய்தாலும், அது 'காட்டுக்கு வழி எது?’ என்றுதான் கேட்கும் -லெக் குழந்தை, குடிகாரன், மூடன் மூவரும் உண்மையைச் சொல்லி விடுவர். -ஹங்கேரி விளையாட்டுக்களிலும், பிரயாணங்களிலும், மனிதர்களுடைய தரம் தெரிந்துவிடும். -ரவியா வாள் வளையாது, தங்கம் துருப்பிடிக்காது. -ரவியா

  • -- ப.-15