பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கிழக்கு மேற்கு இரண்டு திசைகளையும் பார்த்து வணங்குபவன் ஒரு சமயத்தையும். சேர்ந்தவனல்லன். -ரஷ்யா மனிதன் நல்லவனாயிருக்கக் கற்பிக்கும் ஒவ்வொரு சமயமும் நல்லதேயாம் -பெயின் சமயத்திற்கு நில எல்லைகள் இல்லை. - இங்கிலாந்து சமயம் இதயத்தில் உள்ளது, முழங்காலில் அன்று. -( " ) உலகில் சமயமே தலைசிறந்த கவசம், அது வெளிவேடத்திற்கான உடையன்று. - இங்கிலாந்து தத்துவஞானத்தின் தமக்கைதான் சமயம். - இங்கிலாந்து ஒருவருடைய சமயம் மற்றொருவருக்குப் பயித்தியமாகத் தோன்றும். - இங்கிலாந்து சமயம் ஒன்றே ஒன்றுதான், அதில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருக்கலாம். - இங்கிலாந்து

மதத்தில் வெறிகொள்வது சமயப் பற்றில்லாத சமயம்.

- இங்கிலாந்து

ஒருவரையொருவர் வெறுத்துக்கொள்ளும் அளவுக்குத்தான் நம்மிடையே சமயம் நிலவுகின்றது. ஒருவரையொருவர் நேசிக்கும் அளவுக்கன்று. - இங்கிலாந்து சமயம் மக்களை எவ்வளவு மூடர்களாக ஆக்குகின்றது! - ( " ) நட்பைப் போலவே சமயத்திலும் அதிக உணர்ச்சியிருப்பதாகக் காட்டிக் கொள்பவர்களே அந்தரங்க சுத்தியில் குறைந்தவர்கள். - இங்கிலாந்து சமய வாழ்க்கை பெரிய முயற்சியாகும், அது பாட்டுப் பாடுவதன்று. - ஃபிரான்ஸ்

ஆதாயமளிக்கும் சமயத்திற்கு ஆள்பிடிக்க வேண்டியதில்லை.

-இத்தாலி

சமயமில்லாத மனிதன் இலகானில்லாத குதிரை போன்றவன்

-லத்தீன்

சமயம் அனைத்தும் வாழ்க்கையைப் பற்றியது, சமயத்தின்

வாழ்க்கை என்பது நன்மை செய்தல், -சுவீடன்பர்க் சமயம் மக்களை மயக்கும் அபின். -மார்க்ஸ்