பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கம் விழித்து இன்பமாயிரு, அல்லது துரங்கி அழுது கொண்டிரு. -ழ்ேநாடுகள் உறங்குகின்ற ஒநாயின் வாயில் ஆட்டுக்குட்டிகள் போய் விழுவதில்லை. -டென்மார்க் வேகவைத்த புருக்கள் வான வெளியில் பறப்பதில்லை. -- -இங்கிலாந்து அதிருஷ்டத்தில் வலதுகை ஊக்கம், இடது கை சிக்கனம். -இங்கிலாந்து சுறுசுறுப்பு கடன்களை அடைத்துவிடும். -இங்கிலாந்து நடந்து செல்லும் நாய்க்கு எலும்புத் துண்டு கிடைக்கும். -இங்கிலாந்து உபயோகித்த திறவுகோல் பளபளப்பா யிருக்கும். —(?” ) டிராய் (நகரம்) ஒரே நாளில் பிடிக்கப்படவில்லை. -இங்கிலாந்து ஊக்கமுள்ள கையே பொருளைச் சேர்க்கும். -இங்கிலாந்து மூடிய வாய்க்குள் பேரிக்காய் வந்து விழுவதில்லை. -இத்தாலி பூனைக்கு மீன் வேண்டும், ஆனால் அது கால்களே நனைக்காது. = -லத்தின் இடைவிடாத ஊக்கத்திற்கு எதுவும் கஷ்டமில்லை. -சீன கடவுளைத் தொழு; ஆனல் சம்மட்டியை நிறுத்தாதே. -ஸ்பெயின் விடாமுயற்சியுள்ளவர்களிடம் கடவுள் இருக்கிருர். -பாரசீகம் ரோமாபுரியை ஒரே நாளில் கட்டவில்லை. _ -ஃபிரான்ஸ் அதிருஷ்டத்தின் அன்னை ஊக்கம். -ஃபிரான்ஸ் வேகமாய் நடக்கும் இரண்டு கால்களைக் கண்டு ஆமைதான் பழிக்கும். -ஜப்பான் துரங்குகின்ற இருவரில், சேவல் கூவியவுடன், முதலில் எழுந்திருப்பவனே முதலில் சுவர்க்கத்தை அடைவான். -டாவோ