பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 வாலில்லாத சேவல் நித்தியமான குஞ்சு. -பல்கேரியா காலம் தாழ்ந்த பறவை (இப்பொழுதுதான்) சிறகுகளைத் தட்டுகின்றது. அதிகாலையில் எழுந்த பறவை உண வுண்ட அலகைத் துடைத்துக் கொள்கிறது. -எஸ்டோனியா அதிகாலையில் எழுகின்ற பறவை நெடுந்துாரம் செல்லும். -ஸெக் பழைய கங்கில் விரைவில் தீ மூட்டலாம். -எஸ்டோனியா ஊக்கமுள்ளவனிடம் கம்பளம் இருக்கும், சோம்பேறியிடம் ஆடுதான் நிற்கும். -எஸ்டோனியா உண்பதால் செல்வம் தீர்ந்து போகாது, ஊக்கமில்லாமையால் தீர்ந்து போகும். -ஃபின்லந்து சலிப்பில்லாதவன் வெற்றியடைவான். -அமெரிக்கா

ேசாம்பல்

சோம்பேறி சயித்தானின் தோழன். -அரேபியா சோம்பிக்கிடத்தல் ஒரு மனிதனுக்குக் கந்தல்களை அணிவிக்கும். -பழைய ஏற்பாடு வேலை செய்யாமல் இருந்து தின்ருல், மலைபோன்ற செல்வமும் காலியாகும். -சீன சுறுசுறுப்புக்கு எல்லாக் காரியங்களும் எளிது; சோம்பலுக்கு எல்லாம் கஷ்டம். -இங்கிலாந்து சோம்பலுள்ள மூளை சயித்தானின் தொழிற்சாலை. —( * ) இளமையில் சோம்பல், முதுமையில் திண்டாட்டம். -இங்கிலாந்து ஒன்றும் செய்யாமல் இருத்தல் என்பது தீமை செய்வதாகும். -இங்கிலாந்து சோம்பலுள்ள மக்கள் ஒய்வில்லாமல் திரிகிருர்கள். —( * } சோம்பல் என்பது மனத்திலே தோன்றியுள்ள புண். -( ' ) சோம்பல் யாசகத்திற்குத் திறவுகோல். -இங்கிலாந்து