பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சோம்பல் வறுமைக்குத் தாய். -இங்கிலாந்து சோம்பலால் புத்தி துருப்பிடிக்கும். -இங்கிலாந்து சோம்பலாயிருந்தால், தனித்திருக்க வேண்டாம்; தனித் திருந்தால், சோம்பியிருக்க வேண்டாம். -இங்கிலாந்து மடமை எல்லாத் துன்பங்களையும் அழைத்து வரும். -- -இங்கிலாந்து மனத்தின் உறக்கமே சோம்பல். -ஃபிரான்ஸ் சோம்பேறிகளுக்குத்தான் எல்லா விஷயங்களுக்கும் நேரம் இருக்கும். -பிரான்ஸ் சோம்பலுக்குக் கூலி தரித்திரம். -ஜெர்மனி பை நிறையப் பணமிருந்தாலும், சோம்பல் காலி செய்துவிடும். -ஜெர்மனி சோம்பேறி மூச்சு விடுகிருன், ஆனல் வாழவில்லை. -லத்தீன் உறுதியான முடிவு செய்ய முடியாமைக்குச் சோம்பலே மூல காரணம். -லத்தீன் மடமை உயிரோடுள்ள மனிதனுக்குக் கல்லறை. -லத்தின் சோம்பேறிகளுக்கு எந்தத் தேவதையும் துணையில்லை. -லத்தின் சோம்பலுள்ள மனத்திற்கு எது தேவை என்றே தெரியாது. -லத்தின் நின்ருல் காத வழி, அமர்ந்தால் பதினறு காதம், சாப்பிட்ட பின் ஐம்பது காதமாகும். -இந்தியா நடப்பதைவிட அமர்வது நலம் அமர்வதைவிட படுப்பது நலம்; விழிப்பதைவிடத் துயில்வது நலம். எல்லாவற்றை யும்விட மடிவது நலம். -இந்தியா சயித்தான் வேலை செய்பவனுக்கு ஆசை - காட்டுகிருன், சோம்பேறி சயித்தானுக்கே ஆசை காட்டுகிருன். -துருக்கி அசையாத மணி அடிப்பதே யில்லை. -சீன தாங்குபவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவ தில்லை. -அரேபியா