பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கோட்டையுள்ள நகரத்தைக் காட்டினும் வலிமை யுள்ளது உண்மையான இதயம். -இங்கிலாந்து இதயம் சிறிதுதான், ஆனால் பெரிய பொருள்களாலும் அதை நிரப்ப முடியவில்லை. -இங்கிலாந்து மனிதனின் இதயம்தான் சயித்தானின் மறைவிடம். -( ' ) இதயத்தின் மகிழ்ச்சியை முகத்தின் நிறத்தில் காணலாம். -இங்கிலாந்து இதயத்தில் நெருப்புப் பற்றும்பொழுது. வாயிலிருந்தும் சில பொறிகள் வெளிவரும். -இங்கிலாந்து ஒவ்வொரு மனித நெஞ்சிலும் ஒரே இதயம்தான் துடிக்கின்றது. -இங்கிலாந்து தலைதான் எப்பொழுதும் இதயத்தால் ஏமாற்றப் பெறு கின்றது. -ஃபிரான்ஸ் இதயம் ஏற்கும் காரணங்கள் இருக்கும், அவைகளைப் பகுத் தறிவு அறியாது. -பாஸ்கல் காயம்பட்ட இதயத்தைக் குணப்படுத்துவது கடினம். -கத்தே ஒரு கறையும் இல்லாத இதயமே பூரணமான சாந்தியை அறியும். -ஜெர்மனி மறைத்து வைக்கப்பெற்ற மனிதனின் பொக்கிஷம் இதயம். -யூதர் பை நிறைய உள்ள பணத்தைப் பார்க்கிலும், இன்பமுள்ள இதயமே மேல். -இத்தாலி நல்ல இதயம் துரதிருஷ்டத்தைத் தகர்த்து விடும். -ஸ்பெயின் இதயம் நிறைந்திருந்தால், கண்களில் நீர் ததும்பி வழியும். -யூதர் ஆயிரம் சாட்சிகளைவிட இதயத்தின் சாட்சியம் அதிக வலிமை யுள்ளது. -துருக்கி சுவர்க்கத்தை அடையவும், நரகத்தை அடையவும் உன் இதயத்திற்கு ஆற்றலுண்டு. -சயாம் சொற்ப மூளையும் பெரிய இதயமும் பெருங் காரியங்களைச் சாதிக்க முடியும். -ஜெர்மனி ஏழை மனிதனுக்கும் ஒர் இதயமுண்டு. -அமெரிக்கா