பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமரசம்

உன்னதமான ஆன்மாவுக்கு உலகனைத்தும் தாயகம். -கிரீஸ் மனிதனின் பிறப்பிடம் உலகம். -லத்தீன் யாதும் ஊரே, யாவரும் கேளிர். - தமிழ்நாடு

நான்கு கடல்களுக்கு நடுவிலுள்ள அனைவரும் சகோதரர்களே.

-சீனா

இருவர் குதிரை ஏறினால், ஒருவர் பின்னால் அமரவேண்டும்.

- இங்கிலாந்து

கடல் எந்த நதியையும் விலக்குவதில்லை. -இங்கிலாந்து சமரசமுள்ள இடத்திற்கு ஆண்டவன் தன் ஆசியை அனுப்புகிறான். - பல்கேரியா உலகம் அனைத்தும் ஒரே தேசம் - இத்தாலி மனிதர்களோடு சமாதானம் செய்துகொண்டு. உன் பாவங்களுடன் போராடு. -ரஷ்யா அமைதிவேண்டுமானால், எவரையும் மறுத்துப் பேச வேண்டாம். -ஹங்கேரி உலகம் முழுதும் நம் சொந்தவீடு போலவே இருக்கிறது. -லத்தீன்

சுவர்க்கம்

சுவர்க்கத்திற்குச் செல்பவன் தன் இதயத்தை முன்னதாக அங்கு அனுப்பிவிடவேண்டும். - இங்கிலாந்து சரிகை ஆடைகளுடன் நரகத்திற்குப் போவதைவிட, கந்தல்களுடன் சுவர்க்கத்திற்குச் செல்வது மேல். - இங்கிலாந்து சுவர்க்கத்திற்கு மூடுபல்லக்கில் செல்ல முடியாது. - ( " ) சுவர்க்கத்திற்கு ஒரு வழிக்கு மேலேயும் உண்டு. - இங்கிலாந்து