பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து னி வு அபாயமில்லாமல் அபாயத்தைத் தாண்ட முடியாது. -லத்தீன் அச் சம் நல்லது என்று தெரிந்திருத்தும், அதைச் செய்யாமல் விடுதல் கோழையின் குணம். -சீன கோழைகள் கொடுரமானவர். -இங்கிலாந்து அங்கிகள் அணிந்த (பல) கோழைகள் போர்வீரர்கள் -( ' ) கோழை ஒருபொழுதும் இரக்கம் காட்டமாட்டான். ー(”) கோழையைப் போராட வைத்துவிட்டால், அவன் சயித் தானேயே கொன்றுவிடுவான். -இங்கிலாந்து பயத்தை மாற்றப் பச்சிலையில்லை. o -இங்கிலாந்து கடவுளுக்கு அஞ்சு, உன் எதிரிகள் உனக்கு அஞ்சுவர். -( ' ) அச்சம் அன்பைவிட வலியது. -இங்கிலாந்து புண்களுக்கு அஞ்சுவோன் போரின் அருகில் வரக்கூடாது. -இங்கிலாந்து உன் அச்சங்கள் உன்னிடமே இருக்கட்டும், உன் தைரியத்தைப் பிறருக்குப் புகட்டு. -இங்கிலாந்து பயம்தான் முதலில் ஆயுதங்களை எடுத்தது. -இங்கிலாந்து அஞ்சவேண்டியதற்கு அஞ்சினல், கவலை தொலையும். -( ' ) சாவதற்கு முன்பு பன்முறை சாவோர் கோழைகள். -ஷேக்ஸ்பியர் ஆராயாமல் பாய்வதைவிட கோழையாயிருத்தல் மேல். -ஃபிரான்ஸ் பெரும்பாலும் பயத்தினல் தைரியம் பிறக்கும். -ஃபிரான்ஸ் ஒரு பயங்கொள்ளி பத்துப் பேர்களைப் பயங்கொள்ளிகளாக்கி விடுவான், -ஜெர்மனி