பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பிணமாயிருப்பதைவிடக் கோழையாயிருப்பது மேல். -அயரிலந்து அரண்டவனுக்குப் பல குரல்கள் கேட்கும். -ஃபின்லந்து பேச்சில் சிங்கம், இதயத்தில் முயல். -லத்தீன் சுண்டெலி கற்சட்டியையே தின்பதைக் கண்டு, பூசனிக்காய் நடுங்கும். -எகிப்து அடியைவிட மோசம் நடுக்கம். -ஆப்பிரிக்கா போரில் புறங்காட்டி ஒடுபவனுக்காக அவன் வீட்டில் துக்கம் கொண்டாட மாட்டார்கள். -ஆப்பிரிக்கா கோழையின் வீட்டில் அழுகுரலே கேட்காது. (அவன் முன்ன தர்கவே சேமமாக வந்திருப்பான்.) -ஆப்பிரிக்கா அ பாய ம் தியிலிருந்து தப்புவதற்கு மக்கள் கொதிக்கிற எண்ணெயில் விழுவர். -சீன மீனுக்கு (தூண்டிலிலுள்ள) இரைதான் தெரியும், முள் தெரியாது. -சீன மனிதருக்கு இலாபம்தான் தெரியும், அதிலுள்ள அபாயம் தெரியாது. -சீன புலி வாலைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்திலிருந்து தப்ப முடியாது. -சீன நட்பு ஒருவ்னைவிட இருவர் மேல். -பழைய ஏற்பாடு நல்லவர்களோடு உறவாடுங்கள். நீங்களும் நல்லவர்களாக முடியும். -சீன நண்பனின் யோக்கியதையை நீண்ட பயணத்திலும், சிறிய சத்திரத்திலும் கண்டு கொள்ளலாம். -இங்கிலாந்து நண்பரை நாடி நரகத்திற்குச் செல்லாதே. -இங்கிலாந்து