பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சிலர் பிறப்பிலே பெருமையுடன் வருகின்றனர், சிலர் பெருமையை அடைகின்றனர், சிலர் மீது பெருமை திணிக்கப் பெறுகின்றது. -ஷேக்ஸ்பியர் பெரியோர்களுடன் இருக்கும்பொழுது, ஒருவன் ஐந்து என்பது இரட்டை எண் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். -ஜெர்மனி அதிகக் குற்றமில்லாத மனிதன் பெரிய மனிதள். -யூதர் கழுகு ஈக்களை வேட்டையாடாது. -இந்தியா யானை நடந்து செல்கின்றது, நாய்கள் குரைக்கின்றன. -( ' ) நான் (நீருள்) மூழ்கிவிட்டால், உலகமே மூழ்கிவிட்டதாகும். - | -இந்தியா யானைக்கு எல்லோரும் எய்த்தவர்களே. -இந்தியா யானை எவ்வளவு மெலிந்தாலும், மதிப்பில் குறைவதில்லை. கொன்ருல் யானையைக் கொல்லு, கொள்ளையடித்தால் பொக்கிஷத்தைக் கொள்ளையிடு. -இந்தியா மனிதர் தலைப்பாகை அணிவது பெருமைக்காக, குளிருக்குக் காப்பாக அன்று. -இந்தியா மோதிரக் கையால் குட்டினல் வலி இராது. -இந்தியா நாயாயிருந்தாலும், பெரிய இடத்து நாயாயிருக்க வேண்டும். -ஜப்பான் குழம்பு கொதிக்கும்வரை அகப்பைக்கு மதிப்பில்லை. -துருக்கி உள்ளூரில் மனிதன் தன்மையைக் கவனிப்பார்கள்: தொலைவில் தோற்றத்தைக் கவனிப்பார்கள். -சீன துறவிகளின் பாதங்கள் தீண்டும் இடத்தில் தீமைகள் மறையும். -பாரசீகம் மின்மினிப் பூச்சியைக் கண்டு சூரியன் கோபிக்கக் கூடாது. - -சயாம் கனவானுக்கு வேறு பெயர் கிடையாது; அவன் எப்பொழு துமே கனவான்தான். -கன்ஃபூவியஸ் வட்ட மேஜையைச் சுற்றியுள்ள ஆசனங்களில் ஒவ்வொன்றும் முதல் ஆசனம்தான். -ஜெர்மனி