பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

சுவர்க்கத்திற்குப் பாதை இருக்கிறது, ஆனால் அதில் யாரும் செல்வதில்லை; நரகத்திற்கு வாயிலே இல்லை; ஆனால் மனிதர்கள் அதில் ஏறிக் குதிக்கிறார்கள். - சீனா சுவர்க்கமும் நரகமும் உன் இதயத்திலுள்ளவை. - ஜெர்மனி சுவாக்கத்தை அடைவதைவிட, நரகத்தை அடைவதில் சிரமம் அதிகம். -ஜெர்மனி

நாம் எங்கே மடிந்தாலும், அங்கிருந்து சுவர்க்கம் சிறிது தூரம்தான்.

- ஹாலந்து

என் தந்தையின் வீட்டில் (வசிப்பதற்குப்) பல பெரிய இடங்கள் உண்டு. - புதிய ஏற்பாடு கடவுள் சரி என்றால், சுவர்க்கம் என்னுடையது. - ஸ்பெயின் இறைவனின் வலையில் கண்ணிகள் பெரியவை, ஆயினும் அதிலிருந்து எதுவும் தப்புவதில்லை. - லாவோத்ஸே குழந்தைப் பருவத்தில் நம்மைச் சுற்றிலும் சுவர்க்கம் இருக்கிறது. - வோர்ட்ஸ்வொர்த் மலைகளில் ஏறாமல் எவரும் சுவர்க்கத்தின் உயரத்தைத் தெரிந்துகொள்ள முடியாது. - சீனா

நில மார்க்கமாயும், கடல் மார்க்கமாயும் நாம் சுவர்க்கத்திற்கு அருகிலே ஒரே அளவு தூரத்தில் இருக்கிறோம்.

- கில்பெர்ட்

நரகம்

தெய்வ நம்பிக்கை யில்லாதவர்களைச் சுற்றியுள்ள வளையம் நரகம். - குர்ஆன் சுவர்க்கத்திற்கு ஒரே பாதை, நரகத்திற்குப் பல பாதைகள் உண்டு. -ஹங்கேரி நரகத்தில் விசிறிகள் இல்லை. - எகிப்து நரகமும் உயர்நீதி மன்றமும் எப்பொழுதும் திறந்தே யிருக்கின்றன. - இங்கிலாந்து எந்த நரகமும் மனிதர்களைப் பயமுறுத்திப் பாவத்திலிருந்து விலகச் செய்ய முடியாது. - இங்கிலாந்து

உ. ப.-2