பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 வெள்ளம் போய்விடும், வண்டலே தங்கும். -துருக்கி காலத்திற்கு இரண்டு நாட்களே உண்டு-ஒன்று உனக்கு நல்ல நாள், மற்றது உனக்கு ஆகாத நாள். -அரேபியா வசந்தம் தாய்போல் மெல்ல வருகின்றது: மாரிக்காலம் பகைவனைப் போல் மூர்க்கமாக வருகின்றது. -திபேத்து எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு; அவை காலமும் மெளனமும். -ஃபிரான்ஸ் மாரிக்காலத்தில் எங்கும் மழை பெய்யும்; கோடையில் கடவுள் விரும்பிய இடங்களில் மட்டும் பெய்யும் -ஃபிரான்ஸ் மனிதன் மாளிகைகளை அமைக்கிருன்-காலம் அகைளை அழிக் கின்றது. -ஜெர்மனி வசந்த காலம் கன்னி, கோடை அன்னை, இலையுதிர் காலம் கைம்பெண், மாரிக்காலம் மாற்ருந்தாய். -போலந்து ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காலத்தின்மேல் சுமத்து கிருன். fi -இங்கிலாந்து இரும்பு யுகத்தில் பொன்னை வாழ்க்கையை நாம் எதிர் பார்க்கக்கூடாது. -அயர்லந்து எல்லாப் புண்ணுக்கும் காலம்தான் களிம்பு. -வேல்ஸ் சீப்பு தலையை வழுக்கையாக்குவதில்லை. -ஸெக் காலை வேலை பொன்; மாலை வேலை மாசு. -ஸெக் எல்லா ஆண்டுகளும் ஒன்றுபோல் இருக்கமாட்டா. -லெக் திங்கட்கிழமை இழந்தவன் அந்த வாரத்தையே இழந்தவன வான். -கிரீஸ் நீதிபதியைப் பார்க்கிலும் காலம் உண்மையை வெளியே கொண்டு வந்துவிடும். - -ஹங்கேரி காலத்தைப்போல் பழிவாங்குவது வேறு எதுவுமில்லை. -லத்தீன் காலம் என்ற அரம் இராவும் பொழுது, ஒசையே கேட்பதில்லை. -லத்தீன் பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்: நேரத்தை இழந்தால் எல்லாம் நஷ்டம். -ஆர்மீனியா கழிந்த நாள் மீளவும் வராது. -இங்கிலாந்து.