பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை வேலை இல்லையானல், நோய்தான். -இந்தியா புது வேலைக்காரனின் சுறுசுறுப்பு இருபது நாட்களுக்குத்தான் -ஜப்பான் வேலையை இடையில் விடுவது தீது, எல்லை கடந்து செல்வதும் தீது. -சீன ஒருவன் இருந்தால் இரண்டு வாளிகள் தண்ணிர் கொண்டு வருவான்; இருவர் இருந்தால் ஒரு வாளி கொண்டுவருவர்: மூவர் இருந்தால் அதுவும் வராது. -சீன மூன்று வருடம் பஞ்சம் இருந்தாலும், அது சமையற்காரனை அண்டாது. i -சீன சாப்பாட்டை மறு நாளைக்கு ஒத்திவைத்தாலும்; வேலையை ஒத்தி வைக்காதே. -குர்திஸ்தானம் கை பறிப்பதையெல்லாம் தோள்தான் சுமக்க வேண்டும். -மலாய் வேலைக்காரருக்கு உணவு அளி. -பாரசீகம் ஒடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம். -ஃபிரான்ஸ் சயித்தான் உன் வீட்டுக் கதவைத் தட்டிலுைம், உன் வேலை யைத் தொடர்ந்து செய். (உனக்கு வேலையுள்ள இடத்தில் சயித்தானுக்கு வேலை இராது.) -ஜெர்மனி பொதியேற்றிய கழுதை கனைக்கிறது. -ஜெர்மனி ஒரு காரியம் முடிந்தால், தொடக்கமும் முடிவும் கைகோத்து துக் குலாவும். -ஜெர்மனி முதுகிலே சுமையுள்ளவன் மெதுவாக நடப்பான். -ஜெர்மனி வேலை செய்யும் கையிலிருந்தே செழிப்புண்டாகும். அயர்லந்து தொடங்காமலிருத்தல் நலம், தொடங்கியதை இடையில் நிறுத்துதல் திது. -- -ஸ்ெக் வேலையில் ஈடுபட்டிருப்பவனுக்குச் செய்திகள் கேட்க விருப்பம் இராது. -ஸெக்